Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி சொன்ன அந்த வார்த்தை.. என் கனவு அப்படியே நிறைவேறியது.. நெகிழ்ந்து போன இளம் வீரர்!

சென்னை : இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் ஒருமுறை தோனியின் கேப்டன்சியில் ஆடுவது போல கனவு கண்டுள்ளார்.

Recommended Video

‘Sanju udhar jaa’ : Sanju Samon shared his dream with Dhoni

அந்த கனவில் தோனி சஞ்சு சாம்சனின் பீல்டிங் மாற்றி நிற்க வைத்துள்ளார். பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அவரது கனவு அப்படியே நிறைவேறி உள்ளது.

அந்த நிகழ்வு குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதள பேட்டியில் பகிர்ந்து கொண்டார் சஞ்சு சாம்சன்.

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன்

சஞ்சு சாம்சன் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய அணியில் இடம் பெற்று ஒரே ஒரு டி20 போட்டியில் ஆடினார். அதன் பின் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக ரன் குவித்து வந்தார்.

நீண்ட போராட்டம்

நீண்ட போராட்டம்

நீண்ட போராட்டத்துக்குப் பின் கடந்த 2019ஆம் ஆண்டு இந்திய அணியில் மாற்று விக்கெட் கீப்பராக இடம் பெற்றார். அதற்கு காரணம், தோனி அணியில் இடம் பெறாதது தான். அப்படியும் அவருக்கு சில போட்டிகளில் மட்டுமே களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது.

இடையே ரிஷப் பண்ட், ராகுல்

இடையே ரிஷப் பண்ட், ராகுல்

விக்கெட் கீப்பரான தோனி அணியில் இடம் பெறாத நிலையில், அவருக்கு மாற்றாக ரிஷப் பண்ட் அணியில் இடம் பெற்றார். அவரைத் தொடர்ந்து கேஎல் ராகுல் அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக மாறி உள்ளார். இவர்களை தாண்டி தான் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இடம்பெற முடியும்.

தோனி கனவு

தோனி கனவு

இந்த நிலையில், சிஎஸ்கே அணியின் சமூக வலைதள தொகுப்பாளர் ரூபா ரமணி எடுத்த பேட்டியில் பேசிய சஞ்சு சாம்சன், தனக்கு வந்த தோனி கனவு ஒன்று பற்றி கூறினார். அதில் அவர் தோனியின் கேப்டன்சியில் ஆடி உள்ளார்.

தோனி என்ன சொன்னார்?

தோனி என்ன சொன்னார்?

"அந்த கனவில் தோனி அணியின் கேப்டனாக இருக்கிறார். அவர் பீல்டிங் மாற்றிக் கொண்டு இருக்கிறார். நான் ஸ்லிப் அல்லது வேறு எங்கோ நின்று கொண்டு இருக்கிறேன். அப்போது தோனி "சஞ்சு அங்கே போ" என கூறுகிறார்." என தன் கனவை விவரித்தார் சாம்சன்.

2017 இங்கிலாந்து சுற்றுப்பயணம்

2017 இங்கிலாந்து சுற்றுப்பயணம்

பின் 2017 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் தோனி இந்தியா ஏ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட போது, சஞ்சு சாம்சனும் அந்த அணியில் இடம் பெற்றார். அதுதான் தோனி இந்தியா ஏ அணிக்கு கடைசியாக கேப்டனாக ஆடிய போட்டி.

அப்படியே நிறைவேறிய கனவு

அப்படியே நிறைவேறிய கனவு

அந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் கனவு நிறைவேறி உள்ளது. ஆம், தோனி, ஸ்லிப்பில் நின்று இருந்த சஞ்சு சாம்சனை :சஞ்சு இங்கே வா" என பீல்டிங் மாற்றி நிறுத்தி உள்ளார். அந்த சம்பவத்தை பகிர்ந்து கொண்டார் சஞ்சு சாம்சன்.

நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

நெகிழ்ந்த சஞ்சு சாம்சன்

தோனியின் கீழ் ஆடுவது என்பது பல இளம் வீரர்களின் கனவு. அதை நிறைவேற்றிக் கொண்டதோடு, தோனி தன்னை பீல்டிங் மாற்றி நிற்க வைத்த கனவும் நிறைவேறியதை எண்ணி நெகிழ்ச்சி அடைந்தார் சஞ்சு சாம்சன். தோனி சென்ற பிறகு தான் அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 3, 2020, 17:58 [IST]
Other articles published on May 3, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+