தம்பி! இங்கே வா.. யுவராஜ் சிங் செய்த நெகிழ்ச்சி செயல்.. சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சி
2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டிக்கு முன்னதாக, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா ஆகியோர் தனக்கு உதவி செய்ய முன்வந்ததாக சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இந்த வாய்ப்பை சாம்பியன் வீரர்களுடன் இணைந்து செயல்படும் அரிய வாய்ப்பாகக் கருதியதாக அவர் குறிப்பிட்டார்.
ஐந்து போட்டிகளில் மட்டுமே விளையாடிய போதிலும், இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்து, தொடரின் நாயகன் விருதை வென்ற சாம்சன், யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா வழங்கிய அனைத்து அறிவுரைகளையும் உள்வாங்கிக் கொண்டதாகவும் கூறினார். இவர்கள் இருவரும் தாமாக முன்வந்து தனக்கு வழிகாட்ட முன்வந்தனர்.

"யுவி பாய்ஜி (யுவராஜ் சிங்) என்னைத் தொடர்பு கொண்டு, 'நண்பா, உனக்கு உலகக் கோப்பை வருகிறது. என்னுடன் சிறிது நேரம் செலவிடுவது நிச்சயம் உனக்கு உதவும்' என்றார்," என சாம்சன் இ தெரிவித்தார். அவர் மேலும், "யுவி பாய்ஜியும், ராபின் பாயும் என்னைத் தொடர்பு கொண்டனர். நான் அவர்களுடன் நேரம் செலவிட்டேன்," என்று கூறினார்.
"இந்தியாவிற்காக அவர்கள் இரண்டு அல்லது மூன்று உலகக் கோப்பைகளை வென்றுள்ளனர். நாங்கள் சாதிக்க முயற்சிக்கும் விஷயங்களை அவர்கள் ஏற்கனவே செய்தவர்கள். அதனால், அவர்களுக்கு உரிய மரியாதையுடன் சென்று, அவர்கள் பகிர்ந்து கொள்ள விரும்பிய அனைத்தையும் கற்றுக் கொண்டேன்," என்றும் சாம்சன் வெளிப்படுத்தினார்.
யுவராஜ் சிங் பல இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். இதேபோல, டி20 உலகக் கோப்பையின் போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் 97 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்த சாம்சன், தான் எப்போதும் சச்சின் டெண்டுல்கருடன் தொடர்பில் இருந்ததாகவும் அவருக்கு நன்றி தெரிவித்தார்.
"நான் ஆஸ்திரேலியாவில் இருக்கும்போது, போட்டிகளில் விளையாடாமல் வெளியில் அமர்ந்திருந்தேன். அப்போது, 'இப்போது எனக்கு என்ன மனநிலை தேவை?' என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எனவே, நான் சச்சின் சாரை அணுகி, அவருடன் மிக நீண்ட உரையாடல்களை மேற்கொண்டேன்," என்று சாம்சன் கூறினார்.
"நேற்றும் அவர் என்னை அழைத்து, நான் எப்படி உணர்கிறேன் என்று விசாரித்தார். அவரைப் போன்ற ஒருவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெறுவது இதைவிட வேறு என்ன வேண்டும்? அந்த தெளிவு, விளையாட்டிற்கான தயாரிப்பு, ஆட்ட உணர்வு – இவை அனைத்தையும் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்தார். சஞ்சு சாம்சன் அடுத்ததாக, ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் களமிறங்கவுள்ளார்.


Click it and Unblock the Notifications