For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சஞ்சு சாம்சனுக்கு தொடரும் துரோகம்.. வாய்ப்பு கிடைத்தும் பிசிசிஐ செய்த அநியாயம்.. என்ன நடந்தது?

மும்பை : ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான தீபக் ஹூடாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

IND vs SA T20 Series: வெளியேறும் Shami, Hooda! Shreyas-க்கு வாய்ப்பு | Aanee's Appeal

இதன் காரணமாக அவர் வரும் 28ஆம் தேதி தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தீபக் ஹூடா இடம்பெறவில்லை.

இதனால் மாற்று வீரரை பிசிசியை அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரின் போது பி சி சி ஐ அறிவித்த இந்திய அணியில் சஞ்சு சம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை

காரணம்

காரணம்

இந்திய அணியில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகியோர் உள்ளதால் சாம்சனுக்கு இடம் வழங்கவில்லை என தேர்வு குழுவினர் தெரிவித்தனர்.இதனால் சஞ்சு சாம்சன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து அவர்களை சமாளிக்க இந்திய ஏ அணி தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார் .

ரசிகர்கள் ஆத்திரம்

ரசிகர்கள் ஆத்திரம்

இந்த நிலையில், தீபக் ஹூடாவுக்கு காயம் ஏற்பட்டதால் மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பி சி சி ஐ இம்முறையும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது. தீபக் ஹூடா பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது. இது ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.

ஆஸி.க்கு ஏற்ற வீரர்

ஆஸி.க்கு ஏற்ற வீரர்

டி20 உலக கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியா மைதானங்களில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இதனை ரோகித் சர்மா ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சாம்சன் பெயர் பரிசளிக்கப்படவில்லை. அண்மை காலமாக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார்.விக்கெட் கீப்பர் ஆகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

சாம்சன் Vs ஸ்ரேயாஸ்

சாம்சன் Vs ஸ்ரேயாஸ்

ஆனால் ஸ்ரேயாஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் அரை சுதம் அடித்தார். மற்ற போட்டிகளில் அவரும் சொதப்பி இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அணியில் ரிஷப் பண்ட் இருக்கும் நிலையில் சஞ்சு சம்சனும் இந்திய அணிக்கு திரும்பினால் அது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Story first published: Tuesday, September 27, 2022, 10:37 [IST]
Other articles published on Sep 27, 2022
English summary
sanju samson again not considered for ind vs sa t20 series as deepak hooda injured
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+