Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்.. கவுதம் கம்பீரால் சஞ்சு சாம்சனுக்கு அடித்த லக்.. கோலி இடம் அவருக்கு தான்!

மும்பை : டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி தரப்பில் ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அந்த அணியின் முக்கிய விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கீழ் இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு போதிய வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜூலை 6ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தீவிரப்படுத்தியுள்ளது. இதற்கான முதற்கட்டமாக அடுத்த பயிற்சியாளர் யார் என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

t20 world cup indian national cricket team cricket Sanju Samson 20 2024

இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தான் அடுத்த பயிற்சியாளர் என்று கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பயிற்சியாளர் பொறுப்புக்கான நேர்காணலிலேயே கவுதம் கம்பீர் பிசிசிஐ-க்கு பல்வேறு கோரிக்கைகளையும், நிபந்தனைகளையும் கூறியுள்ளார். அதில் முக்கியமாக ஒவ்வொரு கிரிக்கெட் வடிவத்திற்கும் ஒவ்வொரு அணி தேர்வு செய்யப்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

அதில் முதற்கட்டமாக டி20 அணியை ஐபிஎல் தொடரை வைத்து தேர்வு செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். அதன்படி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை கொண்ட அணி தேர்வு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஹர்சித் ராணா, ரியான் பராக், யாஷ் தயாள், அபிஷேக் சர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஜிம்பாப்வே டி20 தொடரில் சஞ்சு சாம்சன் முக்கிய விக்கெட் கீப்பராகவும், துருவ் ஜுரெல் மாற்று விக்கெட் கீப்பராகவும் வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிய வந்துள்ளது. 10 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சஞ்சு சாம்சன், இதுவரை இந்திய அணிக்காக தொடர்ச்சியாக விளையாட வாய்ப்புகள் கிடைத்ததில்லை.

இதனால் புதிய பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு கீழ் சஞ்சு சாம்சனின் முழு திறமையும் வெளிப்படும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான் அணியில் நம்பர் 3ல் களமிறங்கியதை போல் இந்திய அணிக்காகவும் நம்பர் 3 பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று கூறப்படுகிறது. தற்போது டி20 உலகக்கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ள நிலையில், ரிஷப் பண்ட் இருப்பதால், மாற்று விக்கெட் கீப்பராகவே சஞ்சு சாம்சன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, June 19, 2024, 13:54 [IST]
Other articles published on Jun 19, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+