Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அருகே வந்த ஸ்ரீசாந்த்.. கை குலுக்காத சஞ்சு சாம்சன்.. கேரளா கிரிக்கெட் லீக் தொடரில் எழுந்த சர்ச்சை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற 2026 கேரளா கிரிக்கெட் லீக் இறுதிப் போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு விழாவில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் மற்றும் சஞ்சு சாம்சன் இடையே ஏற்பட்ட ஒரு சுவாரசியமான நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் மேடையில் சந்தித்துக் கொண்டும் கை குலுக்கிக் கொள்ளாதது இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் காலிகட் குளோப்ஸ்டார்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திருச்சூர் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பரிசளிப்பு விழாவில் ஏரிஸ் கொல்லம் செய்லர்ஸ் அணியின் இணை உரிமையாளரான ஸ்ரீசாந்த், தனது அணி வென்ற ஃபேர்பிளே (Fairplay) விருதைப் பெற மேடை ஏறினார். அதே மேடையில் கேசிஎல் தொடரின் தூதராகவும் சிறப்பு விருந்தினராகவும் சஞ்சு சாம்சன் நின்றுகொண்டிருந்தார்.

Sanju Samson and Sreesanth No Handshake Controversy at KCL 2026 Presentation

அப்போது ஸ்ரீசாந்தும் சஞ்சு சாம்சனும் அருகருகே வந்தும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, இருவருக்கும் இடையே மோதல் இருப்பதாக ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். ஆனால், வெறும் வீடியோவை மட்டும் வைத்து இருவருக்கும் இடையே தனிப்பட்ட பகை இருப்பதாகக் கூற முடியாது.

உண்மையில் ஸ்ரீசாந்தும் சஞ்சு சாம்சனும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மிக நெருங்கிய நட்பைக் கொண்டவர்கள். சஞ்சு சாம்சனின் ஆரம்பகால கிரிக்கெட் வாழ்க்கைக்கு ஸ்ரீசாந்த் ஒரு வழிகாட்டியாக இருந்துள்ளார். சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தேர்வு ஆட்டத்திற்கு அழைத்துச் சென்று, ராகுல் டிராவிட்டிடம் அவரது திறமையைக் கூறி ஐபிஎல் வாய்ப்பு கிடைக்கச் செய்தவரே ஸ்ரீசாந்த் தான்.

"நானும் யுவராஜும் புறக்கணிக்கப்பட்டோம்..".. விராட் கோலி கேப்டன்சி குறித்து சுரேஷ் ரெய்னா ஆதங்கம்

சஞ்சு சாம்சன் கேரளா அணியில் இருந்து நீக்கப்பட்டபோது, மாநில கிரிக்கெட் சங்க அதிகாரிகளை ஸ்ரீசாந்த் கடுமையாக விமர்சித்து சஸ்பெண்ட் கூட செய்யப்பட்டார். பல ஆண்டுகளுக்கு முன் கேரளா மாநில அணியில் விளையாடிய போது ஒரீரு முறை சஞ்சு சாம்சனை ஸ்ரீசாந்த் விமர்சித்து பேசியதாக சலசலப்பு எழுந்தது. ஆனால், பின்னர் இருவரும் நட்புடனே இருந்தனர். இத்தகைய நட்பைக் கொண்ட இருவர் மேடையில் கைகுலுக்காதது வெறும் தற்செயலான நிகழ்வாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது.

Story first published: Sunday, September 6, 2026, 14:18 [IST]
Other articles published on Sep 6, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+