For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடினமான இரவு.. இது எல்லாம் ஒரு ஸ்கோரா? ஐந்தில் 4 போட்டிகளில் தோல்வி..ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் வேதனை

ஜெய்ப்பூர் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் தோல்வி தழுவி இருக்கிறது. அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜாஸ் பட்லர் கடந்த ஆறு போட்டிகளில் ஒரு முறை கூட அரை சதம் அடிக்கவில்லை.

இதில் இரண்டு டக் அவுட்டுகளும் அடங்கும். இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், இது மிகவும் கடுமையான இரவாக எங்களுக்கு அமைந்தது.

Sanju samson asks batsman to score more runs to defend as RR Faced Heavy loss vs GT

எங்களுடைய பேட்டிங் பவர் பிளே நன்றாகத்தான் இருந்தது. நாங்கள் நல்ல தொடக்கத்தை அளித்தோம். ஆனால் 120 ரன்கள் காத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகவும் கடினமான விஷயமாகும் .இதனை பந்துவீச்சாளர்களால் கண்டிப்பாக தற்காத்துக் கொள்ள முடியாது. இருப்பினும் எங்களுடைய வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

குஜராத் அணி பவுலர்கள் நடு ஓவர்களில் தொடர்ந்து முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். இது எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது. எங்களுக்கு நாளை மறுநாள் இன்னும் ஒரு போட்டி இருக்கிறது. நாங்கள் சமீப காலமாக நல்ல கிரிக்கெட்டை தான் ஆடி வருகிறோம்.

எங்களை நாங்களே தட்டிக் கொடுத்து மீண்டு வர வேண்டும். இனிவரும் வாரங்களில் வெற்றியை ருசிக்க நாங்கள் பசியுடன் இருக்கிறோம் என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார். இந்த தோல்வியின் மூலம் ராஜஸ்தான் அணி 10 போட்டிகளில் விளையாடி 10 புள்ளிகள் உடன் இருக்கிறது. ரன் ரேட்டும் வெகுவாக சரிந்து உள்ளது. இந்த வெற்றி குறித்து பேசிய விருத்மான் சாஹா, நாங்கள் கடந்த ஆண்டு எங்களுக்கு என ஒரு தகுதியை நிர்ணித்திருந்தோம்.

எங்களுடைய பந்துவீச்சாளர்கள் அனைவரும் அணியின் வெற்றிக்காக பங்களிக்கிறார்கள். இதன் காரணமாக தான் பர்பிள் தொப்பி கை மாறி கொண்டே இருக்கிறது. இன்று பவர் பிளவில் அதிரடியாக ஆட வேண்டும் என நினைத்தேன். என் அணி வீரர்கள் எனக்கு அதிக நம்பிக்கை கொடுத்திருக்கிறார்கள். ரஷித் கான் நூர் பந்துவீச்சை விக்கெட் கீப்பராக பிடிக்கும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது எனவும் விரித்மான் சாஹா கூறியுள்ளார்.

Story first published: Friday, May 5, 2023, 23:22 [IST]
Other articles published on May 5, 2023
English summary
Sanju samson asks batsman to score more runs to defend as RR Faced Heavy loss vs GTகடினமான இரவு.. இது எல்லாம் ஒரு ஸ்கோரா? ஐந்தில் 4 போட்டிகளில் தோல்வி..ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் வேதனை
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+