Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ செய்த துரோகம்.. முக்கிய வீரர் விலகல்.. பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்

ஹாமில்டன் : நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டு இருப்பது ரசிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் ரிஷப் பண்டை விட நன்றாக விளையாடிய நிலையில் , அவர் காரணமே இல்லாமல் நீக்கப்பட்டு இருக்கிறார்.

துணை கேப்டனாக இருந்தாலும் சரியாக விளையாடவில்லை என்ற காரணத்தால் பண்ட் நீக்கப்படுவார் என்று தகவல் நேற்று வெளியானது.

காயம்

காயம்

எனினும் கடைசி கட்டத்தில் சஞ்சு சாம்சன் மாற்றப்பட்டு இருக்கிறார். ஹாமில்டனில் மழை பெய்து அதன் காரணமாக மைதானம் ஈரப்பதமாக இருந்தது. இதனால் டாஸ் தாமதமாக வீசப்பட்டது .இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் நட்சத்திர வீரர் சர்துல் தாக்கூர் காயம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவில்லை.

தீபக் சாஹருக்கு இடம்

தீபக் சாஹருக்கு இடம்

இதனால் அவருக்கு பதிலாக சிஎஸ்கே வீரர் தீபக்சாகர் இடம் பெற்றிருக்கிறார். இதேபோன்று சாகல் மாற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவருக்கு மீண்டும் தவான் வாய்ப்பு வழங்கி இருக்கிறார். டாஸ் இழந்தது குறித்து பேசிய ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் தான் டாஸ் வென்று இருந்தால் முதலில் பந்து வீசி இருப்பேன் என்று கூறினார். மழை காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதால் முதலில் பத்து பதினைந்து ஓவர்களுக்கு பந்துவீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் செயல்படும்.

ஷிகர் தவான் கருத்து

ஷிகர் தவான் கருத்து

கடந்த ஆட்டத்திலும் இப்படி தான் ஏற்பட்டது. எனினும் நாங்கள் பாசிட்டிவ் ஆக விளையாடி ரன்கள் சேர்க்க வேண்டும். நாங்கள் ஒரு பத்து சதவீதம் எங்கள் ஆட்டத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என நினைக்கிறேன். அது செய்தாலே போட்டியில் நாங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இன்றைய ஆட்டத்தில் பந்துவீச்சாளர்கள் இறுதி கட்டத்தில் சிறப்பாக வீசுவார்கள் என எதிர்பார்க்கிறேன் என்று தவான் கூறினார். நியூசிலாந்து அணியில் ஆடம் மிலன் நீக்கப்பட்டு சுழற் பந்துவீச்சாளர் பிரேஸ்வெலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

1, ஷிகர் தவான், 2.சுப்மான் கில் 3.ஸ்ரேயாஸ் ஐயர், 4.தீபக் ஹூடா, 5.சூர்யகுமார், 6. ரிஷப் பண்ட், 7.வாசிங்டன் சுந்தர் 8.தீபக் சாஹர், 9. உம்ரான் மாலிக், 10.ஆர்ஸ்தீப் சிங், 11. சாஹல்.

Story first published: Sunday, November 27, 2022, 7:53 [IST]
Other articles published on Nov 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+