Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி போல் அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன்..கடைசி வரை ஆட்டத்தில் பரபரப்பு..போராடி வென்ற தென்னாப்பிரிக்கா

லக்னோ : தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வியை தழுவியது.

ஒரு கட்டத்தில் இந்தியா படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாக்கூர் அதிரடியாக விளையாடி இந்தியாவை வெற்றிக்கு அருகே அழைத்து சென்றார்.

மழையால் ஆட்டம் இரு அணிகளுக்கும் தலா 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது ஷிகர் தவான் தலைமையிலான இன்றைய ஆட்டத்தில் ருத்துராஜ் கெய்க்வாட், ரிவி பிஸ்னாய் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்கினர். டாஸ் வென்ற இந்திய அணி முதல் பந்துவீசியது. ஆடுகளம் முதலில் பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது.

அருமையான பந்துவீச்சு

அருமையான பந்துவீச்சு

இதனை பயன்படுத்தி கொண்டு இந்திய அணி வீரர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்கள். 42 பந்துகளை எதிர்காண்ட ஜென்னிமான் மாலன் 42 பந்துகளை எதிர்கொண்டு 22 ரன்கள் சேர்த்த நிலையில் ஷர்துல் தாக்கூர் ஓவரில் ஆட்டமிழந்தார். கேப்டன் பெவுமா, ஷர்துல் தாக்கூர் பந்தில் 8 ரன்களில் கிளின் போல்ட் ஆனார். இதனைத் தொடர்ந்து ஏய்டன் மார்க்ரம் களத்திற்கு வந்தார். இதே போன்று பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குயின்டன் டி காக் 54 பந்துகளுக்கு 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

250 ரன்கள் இலக்கு

250 ரன்கள் இலக்கு

இதனையடுத்து 5வது விக்கெட்டுக்கு கிளாசன் , டேவிட் மில்லர் ஜோடி பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் தடுமாறினர். மேலும் டேவிட் மில்லர் கொடுத்த 2 கேட்சை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். இதன் மூலம் 40 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 249 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. ஷர்துல் தாக்கூர் 2 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் , பிஸ்னாய் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

தடுமாற்றம்

தடுமாற்றம்

ஷிகர் தவான் 4 ரன்களிலும், சுப்மான் கில் 3 ரன்களிலும் வெளியேற, இந்திய அணி 8 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது.இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் விக்கெட் விழக்கூடாது என்பதால் நிதானமாக விளையாடினார். 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 19 ரன்களை மட்டுமே எடுத்து, ஒரு பவுண்டரியை மட்டும் அடித்தார். இதனால் ருத்துராஜின் ஆட்டம் இந்தியாவுக்கு பெரிய மைனசாக அமைந்தது. இஷான் கிஷன் 37 பந்துகளை எதிர்கொண்டு 20 ரன்கள் சேர்த்தார்.

திருப்புமுனை

திருப்புமுனை

இந்திய அணி தடுமாறிய போது களத்திற்கு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் தோல்வி தடுமாறிய நிலையில், சஞ்சு சாம்சனுடன், ஷர்துல் தாக்கூர் ஜோடி சேர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி தந்தனர். இந்த ஜோடி 93 ரன்கள் சேர்த்தால் இந்திய அணியின் வெற்றி பிரகாசமானது. ஆனால், ஷர்துல் தாக்கூர் 33 ரன்களில் கேட்ச்சாக, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

பரபரப்பான கடைசி ஓவர்

பரபரப்பான கடைசி ஓவர்

கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 39வது ஓவரில் இந்தியா 2 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சஞ்சு சாம்சன் ஒரு சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசி 20 ரன்கள் விளாசினார். சஞ்சு சாம்சன், சிக்சர், பவுண்டரி என தொடர்ந்து அடித்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. எனினும் 4வது பந்து டாட் பாலாகவும், ஆறாவது பந்து சிங்கிள் ஆனதால் இந்தியா 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற சஞ்சு சாம்சன் 63 பந்துகளில் 86 ரன்கள் குவித்தார்.

Story first published: Thursday, October 6, 2022, 23:06 [IST]
Other articles published on Oct 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+