Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேரள சிங்கத்தை குறைத்து மதிப்பிட வேண்டாம்.. தொடக்க வீரர் கேள்வி குறித்து சஞ்சு சாம்சன் கோச் கருத்து

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தற்போது ஆசிய கோப்பை டி20 தொடரில் இடம் பெற்றிருக்கிறார். எப்போதும் தொடக்க வீரராக டி20 கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சன் இடம் பெறுவார். ஆனால் இம்முறை சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டு இருப்பதால், அபிஷேக் சர்மாவுடன் அவர் ஜோடி சேர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவாதம் சூடு பிடித்துள்ள நிலையில், சஞ்சு சாம்சனின் இளம் வயது பயிற்சியாளர் ஆன கோமேஷ் அழைத்துள்ள பேட்டி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

Sanju samson

இது குறித்து பேசிய அவர் சஞ்சு சாம்சன், சர்வதேச கிரிக்கெட் வீரராக செயல் படக்கூடியவர். பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனை நீங்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். அவரால் தொடக்க வீரராகவும் விளையாட முடியும். கீழ் வரிசையிலும் விளையாட முடியும். அதற்கு ஏற்ப திறன் சஞ்சு சாம்சனிடம் இருக்கின்றது.

சஞ்சு சாம்சன் அவருடைய திறமையை நம்பி விளையாடக்கூடிய வீரராக இருக்கின்றார். சஞ்சு சாம்சனுக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதைப்பற்றி அவர் ஏதாவது சொன்னாரா. இது எல்லாம் வெளியிலிருந்து வரும் சத்தம் ஆகும். வெளியே என்ன சொல்கிறார்கள்? பேசுகிறார்கள்? என்பது பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படுவது கிடையாது.

எங்களுடைய குறிக்கோள் சஞ்சு சாம்சனை சிறந்த பேட்ஸ்மேனாக ஒவ்வொரு நாளும் மாற்றும் முயற்சியில் தான் நாங்கள் இருக்கின்றோம். இந்திய அணிக்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டும் தான் சஞ்சு சாம்சன் கவனம் இருக்கும். இங்கிலாந்து தொடரில் அவர் சரியாக செயல்படவில்லை.ஆனால் இது போன்ற சரிவு எல்லாம் கிரிக்கெட்டில் ஒரு பகுதிதான். ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இது போல் ஒரு சரிவு இருக்கும்.

இதேபோன்று ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயத்திற்கு பிறகு அவர் பிசிசிஐ பயிற்சி மையத்தில் தங்கி தன்னுடைய உடல் தகுதியை மீட்டு எடுத்து இருக்கின்றார். தற்போது நடைபெற்று வரும் கேசிஎல் தொடரிலும் அவர் பழைய மாதிரி பேட்டிங் செய்து வருகிறார் என்று சஞ்சு சாம்சன் பயிற்சியாளர் கோமஸ் தெரிவித்துள்ளார்.இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் கடைசியாக பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார். இதில் 5 இன்னிங்ஸில் மொத்தமாகவே சஞ்சு சாம்சன் 51 ரன்கள் தான் அடித்து இருந்தார். அதனை தொடர்ந்து நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஒன்பது இன்னிங்ஸில் அவர் 285 ரன்கள் அடித்திருந்தார்.

Story first published: Wednesday, August 27, 2025, 19:50 [IST]
Other articles published on Aug 27, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+