Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“அந்த 2 ஷாட்கள் தான் மிஸ்சாயிடுச்சி” சஞ்சு சாம்சன் கொடுத்த ஒரு வரி விளக்கம்.. ரசிகர்கள் ஆதரவு மழை!

மும்பை: தென்னாப்பிரிக்காவுடனான தோல்வி குறித்து சஞ்சு சாம்சன் கூறிய ஒரு கருத்துக்கு ரசிகர்கள் ஆதரவுக்குரல் கொடுத்து வருகின்றனர்.

இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 249/4 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய இந்திய அணி 240/8 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

சஞ்சு சாம்சன் பேட்டிங்

சஞ்சு சாம்சன் பேட்டிங்

இந்த போட்டியில் இந்தியா தோற்றாலும், சஞ்சு சாம்சனின் ஆட்டத்தை கண்டு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். இந்திய அணி 51/ 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது வந்த அவர், 63 பந்துகளில் 86 ரன்களை குவித்து அசத்தினார். குறிப்பாக கடைசி ஓவரில் 20 ரன்களை விளாசினார். எனினும் கடைசி ஓவரில் 9 ரன்கள் குறைவாக அடித்ததால் தோல்வியடைந்தது.

சஞ்சு சாம்சன் விளக்கம்

சஞ்சு சாம்சன் விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து சஞ்சு சாம்சன் விளக்கம் அளித்துள்ளார். அதில், களத்தில் நீண்ட நேரம் இருக்க வேண்டும் என முடிவு செய்தேன். அதன்படியே நடந்தது. இந்திய அணிக்காக விளையாடும் போது, மிகவும் ஸ்பெஷலாக இருக்கும். அதுவும் எனக்காக ரசிகர்கள் ஆதரவுக்கொடுப்பது, புத்துணர்ச்சியை கொடுக்கிறது. கூடுதல் நேரம் பயிற்சி மேற்கொள்ள தோன்றுகிறது.

2 ஷாட் குறைவு

2 ஷாட் குறைவு

நேற்றைய போட்டியில் இந்தியா வென்றிருக்க வேண்டும் தான். ஆனால் கடைசி நேரத்தில் இரண்டே இரண்டு ஷாட்கள் மட்டும் குறைவாக இருந்துவிட்டது. அது இருந்திருந்தால் வென்றிருக்கலாம். எனினும் அணிக்காக நான் சிறப்பான பங்களிப்பை கொடுத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்கள் சிறப்பாக செயல்பட்டதே திருப்தியாக இருந்தது. 39வது ஓவரில் நீங்கள் கூறிய அந்த 2 ஷாட்களுக்கான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது சரிவர அமையவில்லை. எனினும் அடுத்து வரும் போட்டிகளில் இதை விட சிறப்பாக செயல்படுங்கள் என வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, October 7, 2022, 16:59 [IST]
Other articles published on Oct 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+