Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 சிக்ஸ் அடிச்சாரா? டபுள் செஞ்சுரி வேறயா? இவரைப் பிடிச்சு டீம்ல போடுங்க.. டாட்டா பைபை சின்னத்தம்பி!

Recommended Video

Sanju samson hits double century | இரட்டை சதம் அடித்து கலக்கிய சஞ்சு சாம்சன்

கோவா : விஜய் ஹசாரே ட்ராபி எனும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் அதிரடி இரட்டை சதம் அடித்து இந்திய கிரிக்கெட் உலகை மிரள வைத்துள்ளார் சஞ்சு சாம்சன்.

இந்திய அணியில் சின்னத்தம்பி போல ஜாலியாக வலம் வரும் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் சரியாக ஆடாத நிலையில் நல்ல மாற்று விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் வேண்டும் என்ற நிலை உள்ளது.

ரிஷப் பண்ட்டுக்கு இனியும் அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்ற நிலையில், சஞ்சு சாம்சன் 10 சிக்ஸ் உடன் சாதனை இரட்டை சதம் அடித்துள்ளார். அவர் விரைவில் இந்திய அணிக்குள் நுழைவார் என இப்போதே பேச்சுக்கள் கிளம்பத் துவங்கி உள்ளன.

விஜய் ஹசாரே ட்ராபி

விஜய் ஹசாரே ட்ராபி

மாநில அளவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் தொடரான விஜய் ஹசாரே ட்ராபியில் கேரளா - கோவா இடையே ஆன போட்டியில் கேரள அணி முதலில் பேட்டிங் செய்தது.

சஞ்சு சாம்சன் வந்தார்

சஞ்சு சாம்சன் வந்தார்

துவக்க வீரர்கள் ராபின் உத்தப்பா 10, விஷ்ணு வினோத் 7 ரன்கள் மட்டுமே எடுத்தனர். மூன்றாவது பேட்ஸ்மேனாக களமிறங்கிய சஞ்சு சாம்சன், நான்காம் வரிசை பேட்ஸ்மேன் சச்சின் பேபி இருவரும் அதிரடி கூட்டணி அமைத்தனர்.

சஞ்சு மரண அடி

சஞ்சு மரண அடி

இருவரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தனர். சச்சின் பேபி 135 பந்துகளில் 127 ரன்கள் எடுத்தார். மறுபுறம், சஞ்சு சாம்சன் மரண அடி அடித்தார். 66 பந்துகளில் சதம் கடந்தார்.

இரட்டை சதம்

இரட்டை சதம்

பின் 125 பந்துகளில் இரட்டை சதம் கடந்து மிரட்டினார். 50 ஓவர்கள் முடியும் வரை ஆட்டமிழக்காமல் நின்ற சஞ்சு சாம்சன் 129 பந்துகளில் 212 ரன்கள் குவித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 164 ஆகும். கேரளா அணி 50 ஓவர்களில் 377 ரன்களை எட்டியது.

அதிக பட்ச ஸ்கோர்

அதிக பட்ச ஸ்கோர்

விஜய் ஹசாரே தொடரில் இது தான் அதிக பட்ச ஸ்கோர். மேலும், இந்திய வீரர்களில் லிஸ்ட் ஏ எனப்படும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளை சேர்த்து பார்க்கும் போது இரட்டை சதம் அடித்த ஆறாவது இந்தியர் ஆவார் சஞ்சு சாம்சன்.

தவான் சாதனை முறியடிப்பு

தவான் சாதனை முறியடிப்பு

இந்தியா ஏ அணிக்காக ஆடிய போட்டியில் ஷிகர் தவான் 132 பந்துகளில் இரட்டை சதம் அடித்து இருந்தார். அதை முறியடித்த சஞ்சு சாம்சன் 125 பந்துகளில் இரட்டை சதம் எட்டினார்.

10 சிக்ஸ்

10 சிக்ஸ்

அதிலும் பவுண்டரி மழை பொழிந்தார் சஞ்சு சாம்சன். 21 ஃபோர் மற்றும் 10 சிக்ஸ் அடித்தார் அவர். "இன்னுமா என்னை டீம்ல எடுக்கலை?" என கேட்பது போல இருந்தது அவரது இந்த ஆட்டம்.

கடந்த மாதமும் அதிரடி

கடந்த மாதமும் அதிரடி

கடந்த மாதம் நடை பெற்ற இந்தியா ஏ அணிக்கான போட்டியில் ஆடிய சஞ்சு சாம்சன் 48 பந்தில் 91 ரன்கள் குவித்தார். அப்போதே இவரை இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

தற்போது மீண்டும் ஒரு முறை முன்பை விட சிறப்பாக ஆடி, இரட்டை சதம் எட்டி, 10 சிக்ஸ் அடித்து தன்னை நிரூபித்து இருக்கும் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக இடம் பெற காத்துக் கொண்டு இருக்கிறார்.

ரிஷப் பண்ட்டுக்கு முற்றுப் புள்ளி

ரிஷப் பண்ட்டுக்கு முற்றுப் புள்ளி

ரிஷப் பண்ட் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மற்றும் தென்னாப்பிரிக்க டி20 தொடரில் மோசமாக ஆடி டெஸ்ட் அணியில் தன் இடத்தை இழந்துள்ளார். இந்த நிலையில், சஞ்சு சாம்சன் அடித்த இரட்டை சதம், ரிஷப் பண்ட்டின் தொடர் வாய்ப்புக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என கருதப்படுகிறது.

Story first published: Saturday, October 12, 2019, 16:33 [IST]
Other articles published on Oct 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+