Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IPL 2026: சிஎஸ்கே ரசிகர்கள் பாவம் இல்லையா? 7 ரன்களில் சஞ்சு சாம்சன் அவுட்.. பஞ்சாப் அபாரம்

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 7 ரன்களில் ஆட்டம் இழந்து மீண்டும் ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறார். தோனிக்கு மாற்று வீரராக சிஎஸ்கே அணியை எதிர்காலத்தில் வழி நடத்துவார் என்று ரசிகர்கள் சஞ்சு சாம்சன் மீது அதிக அளவு நம்பிக்கை வைத்தனர்.

ஆனால் அவர் அதை தொடர்ந்து வீணடித்து வருகிறார். டி20 உலக கோப்பையில் கடைசி மூன்று போட்டிகளில் அரை சதம் விளாசி தொடர் நாயகன் விருது வென்ற் சாம்சன், இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.

அதே பார்மில், தற்போது ஐபிஎல் தொடரிலும் அவர் பட்டையை கிளப்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் சாம்சன் தொடர்ந்து 2 போட்டிகளாக ஏமாற்றி வருகிறார். ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் 6 ரன்களின் ஆட்டம் இழக்க பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெறும் ஏழு ரன்களில் பெவிலியன் திரும்பினார்.

இது சிஎஸ்கே ரசிகர்களை ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. சஞ்சு சாம்சன் ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பெரிய தாக்கத்தை எதுவும் இதுவரை ஏற்படுத்தியது கிடையாது. இதுவரை ஐபிஎல் வரலாற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 இன்னிங்ஸ் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் மொத்தமாகவே 59 ரன்கள் தான் அடித்திருக்கிறார்.

அவருடைய சராசரி 11 என்று அளவிலும், ஸ்ட்ரைக் ரேட் 100 என்ற அளவிலும் உள்ளது. அவருடைய அதிகபட்ச ஸ்கோர் சேப்பாக்கம் மைதானத்தில் 26 ரன்கள் ஆகும். அதுவும் 2015 ஆம் ஆண்டு அடிக்கப்பட்டது. சஞ்சு சாம்சன் சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்ட பந்துகளில் 38 சதவீதம் டாட் பால் ஆகும்.

அண்மையில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சேப்பாக்கம் மைதானத்தில் களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் தான் எடுத்திருந்தார். இன்றைய ஆட்டத்திற்கு முன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் திருப்புமுனையை ஏற்படுத்துவார் என ஸ்ரீகாந்த் கணித்த நிலையில் சாம்சன் அனைவரின் எதிர்பார்ப்பையும் வீணடித்து சென்றிருக்கிறார்.ம்பியுள்ளார்.

Story first published: Friday, April 3, 2026, 20:00 [IST]
Other articles published on Apr 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+