Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு தொடரும் துரோகம்.. இதுக்கு பேரு தான் வாய்ப்பா? ஏன் இந்த பாகுபாடு?

மும்பை: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ள சம்பவம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாவை சேர்ந்த 27 வயதான சஞ்சு சாம்சன். 7 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால் இதுவரை மொத்தம் 13 டி20 போட்டியிலும், ஒரே ஒரு நாள் போட்டியிலும் மட்டுமே விளையாடியுள்ளார்.

நடப்பு சீசனில் சாம்சன்

நடப்பு சீசனில் சாம்சன்

ஐபிஎல் தொடரில் அதிரடியாக ஆடும் வீரர். திறமையான விக்கெட் கீப்பர், ஆட்டத்தை தனியாளாக மாற்றும் திறன் என பல திறமைகள் இருந்தும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்படவில்லை. நடப்பு ஐபிஎல் சீசனில் 14 போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன், 374 ரன்களை அடித்துள்ளார். ஆனால் அவருக்கு வாய்ப்பு இல்லை.

சஞ்சு சாம்சன் Vs வெங்கடேஷ் ஐயர்

சஞ்சு சாம்சன் Vs வெங்கடேஷ் ஐயர்

அதே சமயம், 12 போட்டியில் நடப்பு சீசனில் விளையாடி 182 ரன்களும், விக்கெட்டே எடுக்காத வெங்கடேஷ் ஐயருக்கு மட்டும் இந்திய டி20 அணியில் இடம் கிடைத்துள்ளது. இதனால் ஏன் இந்த பாகுபாட்டை பிசிசிஐ காட்டுவதாக ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர் கேப்டன் ரோகித் சர்மா தான், ஆஸ்திரேலிய மைதானங்களில் சஞ்சு சாம்சன் போல் ஷாட்கள் ஆடும் வீரர்கள் தேவை என்றும், அவருக்கு ஆதரவு தருவோம் என்று கூறினார்.

20 வயதில் அறிமுகம்

20 வயதில் அறிமுகம்

ஆனால் இலங்கைக்கு எதிராக 2 போட்டியில் மட்டுமே வாய்ப்பு வழங்கிவிட்டு தற்போது அணியிலிருந்து தூக்குவதை என்னவென்று சொல்வது? இந்திய அணிக்கு சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள பெட்டர்னை பார்த்தால், இப்படி ஒரு அதிர்ஷ்டம் தான் சஞ்சு சாம்சனுக்கு கிடைத்தது என தெளிவாக தெரியும். தனது 20வது வயதில் 2015ஆம் ஆணடு முதல் முறையாக இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

வாய்ப்பு வழங்கப்பட்ட விதம்

வாய்ப்பு வழங்கப்பட்ட விதம்

அதன் பின்பு, 2020ஆம் ஆண்டு தான் (ஜனவரி மாதம்) சஞ்சு சாம்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. அதன் பின்னர் அடுத்த மாதம் 2 போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு 2020ஆம் ஆண்டு (டிசம்பர்) 10 மாதம் கழித்து தான் இந்திய அணியில் 3 டி20 போட்டியில் விளையாட சாம்சனுக்கு இடம் கிடைத்தது. அதன் பிறகு 2021 ஜூலையில் 3 போட்டியும், 2022 பிப்ரவரியில் 2 போட்டியில் மட்டுமே விளையாட வாய்பபு கிடைத்தது. தற்போது மீண்டும் அணியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார் சஞ்சு சாம்சன்.

Story first published: Sunday, May 22, 2022, 20:04 [IST]
Other articles published on May 22, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+