Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.. அணியின் உரிமையாளராக மாறிய ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சாம்சன்

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த வீரர்களில் ஒருவராக விளங்கும் சஞ்சு சாம்சன் 10 ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக சர்வதேச போட்டிகளில் விளையாடினார். ஆனால் இதுவரை அவர் 50 சர்வதேச போட்டிகளில் கூட இந்திய அணிக்காக விளையாடுவதில்லை.

வாய்ப்பு அவருக்கு எப்போதாவது தான் கிடைக்கும். அப்படி கிடைத்தாலும் அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்வதில்லை. அப்படி சரியாக பயன்படுத்திக் கொண்டால், மீண்டும் அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும். உதாரணத்திற்கு அவர் கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் விளையாடும் போது சதம் அடித்தார்.

sanju samson cricket rajasthan royals ksl

ஆனால் அதன் பிறகு தேர்வு செய்யப்பட்ட இந்திய ஒரு நாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. இந்த சூழலில் சஞ்சு சாம்சன், தற்போது விளையாட்டு துறையின் வியாபாரத்தில் குதித்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஆகவும் களத்தில் யுக்திகளை வகுக்கும் வீரராகவும் விளங்கிய சஞ்சு சாம்சன், தற்போது விளையாட்டு வணிகத்தில் தன்னுடைய திறனை காட்டப் போகிறார்.

இந்த நிலையில் தான் சஞ்சு சாம்சன் கேரளா சூப்பர் லீக் என்ற தொடரில் மலப்புரம் எப் சி என்ற கால்பந்து அணியின் உரிமையாளர்களில் ஒருவராக சேர்ந்து இருக்கிறார். கொச்சியில் இந்த தொடர் நடைபெற்றது இதில் கொச்சி அணியை மலப்புரம் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வீழ்த்தியது. இந்த சூழலில் தான் சஞ்சு சாம்சன் மலப்புரம் அணியின் உரிமையாளராக இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட்டை அடுத்து கால்பந்து மீது தான் அதிக காதல் இருக்கிறது. தான் கிரிக்கெட் விளையாடாத காலத்தில் உள்ளூர் வீரர்களுடன் சஞ்சு சாம்சன் கால்பந்து போட்டிகளில் அதிகம் விளையாடுகிறார். இதனால் சஞ்சு சாம்சன் கிரிக்கெட்டை விட்டு போய்விடுவார் என்றெல்லாம் சிலர் கமெண்ட் அடித்தார்கள். இந்த நிலையில் தான் பிஸ்மி, அன்வர் ஆமீன் மற்றும் பேபி நீலாம்பரா ஆகியோர் இணைந்து நடத்தும் மலப்புரம் எப்சி அணியில் சஞ்சு சாம்சனும் உரிமையாளராக இணைந்து இருக்கிறார்.

சஞ்சு சாம்சன் தற்போது துலீப் கோப்பை தொடரில் இந்திய டி அணியில் கடைசி இடத்தில் இருந்தாலும், அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சஞ்சு சாம்சனை விட கே எஸ் பரத் அணியில் இருந்ததால் அவருக்கு தான் விளையாட வாய்ப்பு கிடைத்ததே தவிர, சஞ்சு சம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இந்த சூழலில் தற்போது சஞ்சு வணிக வியாபாரத்தில் கவனம் செலுத்த தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Tuesday, September 10, 2024, 8:01 [IST]
Other articles published on Sep 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+