Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சனுக்கு அடித்த ஜாக்பாட்.. வேறு வழியின்றி பிசிசிஐ செய்த விஷயம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி!

மும்பை: இந்திய அணியில் மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

Sanju Samson-ன் Photo-வை காட்டிய Suryakumar! அதிர்ந்த Thiruvananthapuram

ஆஸ்திரேலிய அணியுடனான டி20 தொடரை வெற்றிகரமாக முடித்த இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

தென்னாப்பிரிக்க சீரிஸ்

தென்னாப்பிரிக்க சீரிஸ்

டி20 தொடர் வரும் செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 4ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பின்னர் ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 6ம் தேதி தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. டி20 தொடருக்கான இந்திய வீரர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

என்ன காரணம்

என்ன காரணம்

டி20 உலகக்கோப்பை தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான அணி அக்டோபர் 6ம் தேதியன்று தான் ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. இதனால் அன்று தொடங்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடருக்காக புதிய அணியை உருவாக்கவுள்ளனர்.

சஞ்சு சேர்ப்பு

சஞ்சு சேர்ப்பு

இந்த அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் துணைக் கேப்டனாக அணிக்குள் சேர்க்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால் ரசிகர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இதனையடுத்து நியூசிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு கொடுத்திருந்தனர்.

வல்லுநர்கள் கருத்து

வல்லுநர்கள் கருத்து

இந்நிலையில் தான் தென்னாப்பிரிக்காவுடனான தொடரிலும் அவருக்கு வாய்ப்பு கொடுத்து ஆறுதல் செய்துள்ளது பிசிசிஐ. டி20 உலகக்கோப்பை அணியில் ஏற்கனவே டாப் ஆர்டர் நன்கு செட்டாகிவிட்டதால் சஞ்சு சாம்சனை சேர்க்க முடியாத சூழல் உருவானது. இப்படி இருக்கையில் அவருக்கு இதுபோன்ற சில போட்டிகளில் வாய்ப்பு தருவது பாராட்டக்கூரியது என வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Story first published: Tuesday, September 27, 2022, 11:18 [IST]
Other articles published on Sep 27, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+