Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் அடித்த சதம்.. பெரிய பிளானை தயாரித்த கம்பீர்.. உடனே வந்து சேர அழைப்பு

மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சாதனை சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி t20 கிரிக்கெட்டில் 297 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்தியா மிகப்பெரிய வெற்றி பெற்றது. சர்வதேச கிரிக்கெட்டில் தமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம் சஞ்சு சாம்சன் அதனை சரியாக பயன்படுத்துவதில்லை என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதற்கு சஞ்சு சாம்சன்,தற்போது தக்க பதிலடி கொடுத்திருக்கிறார். இந்த சூழலில் சஞ்சு சாம்சனை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் பயன்படுத்த கௌதம் கம்பீர் முடிவெடுத்திருக்கிறார். கிரிக்கெட்டில் உள்ள நுணுக்கங்கள் மற்றும் யுக்திகளை அமைப்பதில் சஞ்சு சாம்சன் வல்லவராக திகழ்கிறார்.

ind vs nz sanju samson virat kohli

இதனால் அவரை இந்திய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் அணியில் சேர்க்க கம்பீர் முடிவெடுத்திருக்கிறார். டி20 கிரிக்கெட்டில் ஏற்கனவே சஞ்சு சாம்சன், தன்னுடைய திறமையை நிரூபித்துள்ள நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் சஞ்சு சாம்சனுக்கு தற்போது இடம் தரப்படவில்லை. கடைசியாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்தும் அவர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த தருணத்தில் சஞ்சு சாம்சனை ஒரு நாள் அணியிலும் சேர்க்க கம்பீர் முடிவெடுத்து இருக்கிறார். இதன் ஒரு பகுதியாக சஞ்சு சாம்சனை ரஞ்சிப் போட்டியில் இரண்டாவது சுற்று ஆட்டங்களில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. அதன்படி சஞ்சு சாம்சன் தற்போது கேரள கிரிக்கெட் அணியில் விளையாடப் போகிறார்.

அக்டோபர் 18ஆம் தேதி ஆளூர் கிரிக்கெட் மைதானத்தில் கர்நாடகாவுக்கு எதிராக கேரள அணி மோத போகிறது.இதில் சஞ்சு சாம்சன் விளையாடப் போகிறார் சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில் சச்சின் பேபி கேரள அணியின் கேப்டனாக செயல்பட்ட நிலையில் தற்போது சங்கு சாம்சன் கேப்டனாக திரும்பி இருக்கிறார். கேரளா விளையாடிய முதல் போட்டியில் பஞ்சாப் அணியை சொந்த மண்ணில் வீழ்த்தியது.

இந்த நிலையில் சஞ்சு சாம்சன் ரஞ்சி அணியில் திரும்பி இருப்பதால் கேரளாவின் பலம் மேலும் அதிகரித்து இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய ஏ அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

Story first published: Tuesday, October 15, 2024, 14:19 [IST]
Other articles published on Oct 15, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+