Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் - சிஎஸ்கே.. அமெரிக்காவில் சந்திப்பு.. மனம் மாறிய நிர்வாகம்.. தகவல் உண்மைதான் போலையே!

சென்னை: சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு மாறவிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்த நிலையில், அவர் அமெரிக்காவில் நடந்து வரும் மேஜர் லீக் கிரிக்கெட் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியான டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய போட்டியின்போது மைதானத்தில் இருந்தார்.

மேலும், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகத்தினருடன் அவர் நெருக்கமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்த காட்சிகள் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வருவார் என்பதை உறுதிப்படுத்துவதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர். இது ஐபிஎல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Sanju Samson Chennai Super Kings Rajasthan Royals IPL

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறுவாரா என்ற எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுபோல இதற்கு முன் எந்த ஒரு வீரரையும் அணிமாற்றம் செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த வீரரையும் அணிமாற்றம் செய்வதில்லை என்பதை ஒரு கொள்கை முடிவாகவே வைத்து இருக்கிறது சிஎஸ்கே அணி. எனவே, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணிமாற்றம் செய்யுமா என்ற கேள்வியும் உள்ளது. ஒருவேளை தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகம் மனம் மாறி தங்கள் கொள்கையை தளர்த்திக் கொள்ளுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதற்கிடையே, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் சிவம் துபே ஆகியோரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு அளித்துவிட்டு, சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கும் என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலை வெளியிட்டது, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு நெருக்கமானவரான ஆர்.எஸ். பிரசன்னா என்பவர்.

இவர் கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பும் இதே போல சிஎஸ்கே அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இருந்து ரிஷப் பண்ட்டை அணிமாற்றம் செய்யப் போவதாக கூறியிருந்தார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த முறை சஞ்சு சாம்சன் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியுடன் நெருக்கமாக இருப்பதை சுட்டிக்காட்டி அவர் சொல்வது உண்மையாக இருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அங்குதான் சஞ்சு சாம்சனும் இருக்கிறார் என்பதால், அநேகமாக சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வர வாய்ப்புள்ளது. ஆனால், இது ஏலத்தின் மூலம் நடக்குமா அல்லது ஏலத்தில் இல்லாமல் அணிமாற்றமாக நடக்குமா என்பது பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

Story first published: Saturday, June 28, 2025, 10:14 [IST]
Other articles published on Jun 28, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+