Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய டி20 அணி கேப்டனாக சஞ்சு சாம்சன் வர பிசிசிஐ நிர்வாகிகள் எதிர்ப்பு.. காரணம் இது தான்

மும்பை: 2026 T20 உலகக் கோப்பையில் இந்தியாவின் 'தொடரின் சிறந்த வீரர்' விருதை வென்ற சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவிற்கு அடுத்து இந்திய டி20 கேப்டன் பதவிக்கு பரிசீலிக்கப்பட வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. உலகக் கோப்பையை வென்றபோதும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் அழுத்தத்தில் உள்ளதால், அடுத்த தலைமைத் தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட்டில் சூடுபிடித்துள்ளது.

2026 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தொடரின் தொடக்கத்தில் சில போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும், தனக்குக் கிடைத்த 5 இன்னிங்ஸ்களில் 321 ரன்களைக் குவித்து அசத்தினார்.

குறிப்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 97* ரன்கள், இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்கள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 89 ரன்கள் என அடுத்தடுத்து மூன்று நாக்-அவுட் போட்டிகளிலும் மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் ஆடினார். 80.25 சராசரி மற்றும் 199.37 ஸ்ட்ரைக் ரேட்டுடன் இந்தத் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 3-வது இடம் பிடித்த சஞ்சு சாம்சன், இந்தியாவின் உலகக் கோப்பை வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து 'தொடரின் சிறந்த வீரர்' (Player of the Tournament) விருதையும் வென்றார்.

ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை

ஐபிஎல் பவர்பிளே விதியை மாற்ற வேண்டும்.. சச்சின் டெண்டுல்கர் யோசனை

2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன், அங்கும் தனது அபாரமான ஃபார்மைத் தொடர்ந்தார். அந்த சீசனில் மே 18 நிலவரப்படி, 13 இன்னிங்ஸ்களில் விளையாடி 477 ரன்களை (47.7 சராசரியுடன்) குவித்தார். இந்தத் தொடரின் போது ஐபிஎல் வரலாற்றில் 5,000 ரன்கள் என்ற மைல்கல்லை மிகக் குறைந்த பந்துகளில் (3,555 பந்துகள்) கடந்த அதிவேக இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.

அதுமட்டுமின்றி, ஒரு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் அடித்திருந்த எம்.எஸ். தோனியின் (2013-ல் 461 ரன்கள்) நீண்ட கால சாதனையையும் முறியடித்து சென்னை ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றார்.சுப்மன் கில், திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், அக்சர் படேல் போன்ற பல இளம் வீரர்களின் பெயர்கள் கேப்டன் பொறுப்புக்கு அடிபடுகின்றன. சூர்யகுமார் ஃபார்ம் இழந்தபோது சாம்சன் மாற்று கேப்டனாகக் கருதப்பட்டார்.

ஆனால், சில காலம் விவாதத்திலிருந்த அவரது பெயர் தற்போது இந்தப் பட்டியலிலிருந்து மறைந்துவிட்டது.சாம்சன் திறமையான வீரராக இருந்தாலும், டி20 ஆட்டத்தில் நிலையான செயல்பாடு குறித்து பிசிசிஐ தேர்வுக்குழுவினருக்கு முழுமையான நம்பிக்கை இல்லை என்பதை உறுதிப்படுத்துகின்றன.இது குறித்து வெளியான தகவலின் படி, "உலகக் கோப்பையில் அக்சர் படேல் துணை கேப்டனாகச் செயல்பட்டார்.

வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் பார்த்து வியந்து போய்விட்டேன்.. இப்படி ஒரு திறமையா? ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

வைபவ் சூர்யவன்ஷி பேட்டிங் பார்த்து வியந்து போய்விட்டேன்.. இப்படி ஒரு திறமையா? ஆஸி. கேப்டன் கம்மின்ஸ்

இஷான் கிஷன் இளம் வயது, சிறந்த ஃபார்ம் மற்றும் தலைமைப் பண்புக்கான ஆட்டத்தை காட்டுகிறார். சஞ்சு சாம்சனின் பெயர் சமீபத்திய சிறந்த ஆட்டம் காரணமாகவே அடிபடுகிறது, ஆனால் அவரது நிலையற்ற ஆட்டம் முக்கிய முடிவெடுப்பவர்களுக்கு திருப்தி அளிக்கவில்லை" என்று பிசிசிஐ வட்டாரம் தெரிவித்திருக்கிறது.

Story first published: Wednesday, June 3, 2026, 16:28 [IST]
Other articles published on Jun 3, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+