Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

Sanju samson: 2 போட்டிகளில் சொதப்பியதால், என் மனதில் எனக்கே சந்தேகம் வந்துவிட்டது.. சதம் விளாசிய பிறகு சாம்சன் பேச்சு

சென்னை: ஐபிஎல் 2026 ஆம் ஆண்டு சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தனது முதல் சதத்தை சஞ்சு சாம்சன் விளாசி இருக்கிறார். இது ஐபிஎல் வரலாற்றில் சஞ்சு சாம்சன் அடித்திருக்கும் நான்காவது சதமாகும். கடந்த மூன்று போட்டிகளாக பேட்டிங்கில் தடுமாறிய சஞ்சு சாம்சன், இன்று அதிரடி காட்டி ரன்களை சேர்த்து இருக்கிறார்.

56 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 பவுண்டரி, நான்கு இமாலய சிக்சர் அடித்திருக்கிறார். சஞ்சு சாம்சன் இன் ஸ்ட்ரைக் ரேட் 205 என்ற அளவில் இருந்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் சஞ்சு சாம்சன் நிற்க, சிஎஸ்கே அணி 20 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்துள்ளது.

இது குறித்து இன்னிங்ஸ் இடைவெளியில் பேசிய சாம்சன், கடந்த மூன்று போட்டிகளாக தடுமாறிய நிலையில் இப்போது அடித்திருப்பது எப்படி இருக்கிறது என்று ரவி சாஸ்திரி கேட்டார். அதற்கு பதில் அளித்த சஞ்சு சாம்சன், உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கின்றது. முதலில் நான் ரவி சாஸ்திரிக்கு தான் நன்றி தெரிவித்துக் கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அவரை போட்டிக்கு முன்பு சந்திப்பது எனக்கு அதிர்ஷ்டமாகவே இருக்கிறது. எனவே நான் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் தயவு செய்து மைதானத்திற்கு வந்து விடுங்கள் என்று கூறி சிரித்தார். தொடர்ந்து பேசிய அவர், உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நாம் எந்த பார்மில் இருந்தாலும் சரி நாட்டுக்காக எவ்வளவு பெரிய கோப்பையை வென்று கொடுத்தாலும் சரி பேட்டிங்கில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் விளையாட வில்லை என்றால் நமது மனதில் நமக்கு சந்தேகம் எழுந்து விடும்.

இந்த சமயத்தில் நான் அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினேன். பந்தை அடித்து ஆட வேண்டுமா இல்லை நாம் என்ன செய்கிறோமோ? அதை தொடர்ந்து செய்ய வேண்டுமா என்ற குழப்பம் இருந்தது. ஆனால் நல்வாய்ப்பாக என்று நான் பேட்டிங்கில் ரன்கள் சேர்த்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆடுகளம் நன்றாக இருந்தது.

முதல் சில ஓவர்களில் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்தது. அக்சர் பட்டேல் பந்து வீசும் போதெல்லாம், பந்து கொஞ்சம் நின்று வந்தது. ஆனால் பந்து பழையதாக மாறியவுடன் பேட்டிங்கிற்கு சாதகமாக மாறிவிட்டது. ஆயுஷ் மாத்ரே உடன் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தேன்.

அவருடன் சேர்ந்து விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாங்கள் பெரிய இலக்கை குவிக்க வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் அணியின் பேட்டிங் ஆர்டர் மிகவும் பலமாகவும் பெரியதாகவும் இருக்கின்றது. எனவே எந்த பவுலர்களை தாக்கி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து யோசித்தோம். இது சவாலான ஸ்கோர் தான. நாங்கள் மட்டும் பவர் பிளேவில் சிலர் விக்கெட்டுகளை வீழ்த்தினால், நிச்சயம் நாங்கள் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது என சஞ்சு சாம்சன் கூறினார்.

Story first published: Saturday, April 11, 2026, 21:39 [IST]
Other articles published on Apr 11, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+