
கேரளாவின் பல வருட கனவு
இந்திய அணியில் தற்போது பெரிய அளவில் பங்களிப்பை தராத ஒரே மாநிலம் கேரளாவாகத்தான் இருக்கிறது. ஒருகாலத்தில் வேகப்பந்தில் வித்தியாசம் காட்டிய கேரளாவை சேர்ந்த ஸ்ரீசாந்த் சூதாட்ட புகார் காரணமாக கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தடைபெற்றார். அதன்பின் அந்த மாநிலத்தில் இருந்து இந்திய அணிக்கு ஒரு பிளேயர் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. இந்த நிலையில் திருவனந்தபுரத்தை சேர்ந்த சஞ்சு சாம்சனை மொத்த கேரளாவே செல்லப்பிள்ளையாக வைத்து கொண்டாட தொடங்கியது.

இந்திய அணியில் இணைவார்
இந்த நிலையில் தற்போது சஞ்சு சாம்சன் இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கும் ஒருநாள் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இருக்கிறது. இதற்கு முன்பே அவர் இங்கிலாந்துக்கு எதிராக 2014ல் நடத்த ஒருநாள் போட்டியில் அணியில் சேர்க்கப்பட்டார். ஆனால் அப்போது அவர் பிளெயிங் லெவனில் இடம்பெறவில்லை. அதன்பின் முதன்முறையாக 2015ல் ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி-20 போட்டியில் விளையாடினார். அதுதான் அவரது கடைசி ஐசிசி போட்டியாகும்.

சஞ்சு சாம்சனின் சாதனைகள்
இந்திய அணியில் இணையப்போகும் சஞ்சு சாம்சன் மிகவும் திறமையான பேட்ஸ்மேன் ஆவார். கடந்த நான்கு வருடமாக தன்னுடைய பார்மை இவர் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். மேலும் கடைசியாக நடந்த ரஞ்சி டிராபி போட்டியிலும் மிகவும் சிறப்பாக பார்பார்ம் செய்து இருக்கிறார். வலது கை பேட்ஸ்மேனான இவர் நன்றாக கீப்பிங் செய்யக்கூடியவர். கடந்த வருடங்களில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் பலரது கவனத்தையும் கவர்ந்து இருக்கிறார்.

டோணிக்கு பதிலாக விளையாடுவாரா
இவர் கடைசியாக ஆடிய டி-20 போட்டியில் இந்திய அணியின் முக்கியமான வீரரான டோணிக்கு பதிலாக களம் இறக்கப்பட்டார். இந்த நிலையில் இந்த நிலையில் 'ரொட்டேஷன் பாலிசி' என்ற தேர்வு முறை நடைமுறையில் இருப்பதால் கண்டிப்பாக இவர் டோணிக்கு பதிலாக களம் இறங்குவார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடக்க இருக்கும் தொடரை கருத்தில் கொண்டு டோணிக்கு ஒய்வு அளிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications