Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியிலிருந்து நீக்கினாலும் நான் ராஜா தான்.. இது என்னுடைய கோட்டை.. கெத்து காட்டும் சஞ்சு சாம்சன்

திருவனந்தபுரம்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பல வீரர்கள் விளையாடினாலும் இந்திய அணியில் குறிப்பாக ஒரு திறமை வாய்ந்த வீரருக்கு மட்டும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அது வேறு யாருமில்லை தென்னகத்து சிங்கம் சஞ்சு சாம்சன் தான். ஐபிஎல் தொடரில் கேப்டன் தொடக்க வீரர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என எந்த பணியை கொடுத்தாலும் சிறப்பாக செய்வதில் சஞ்சு சாம்சன் வல்லவர்.

Sanju samson poster behind indian team practice session went viral

ரிஷப் பந்த், கே எல் ராகுல் ஆகியோர் காயம் அடைந்தபோது சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சில போட்டிகளில் அவர் தடுமாறியதால் தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால் மற்ற வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் சிறு அளவில் கூட சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணி நிர்வாகம் தரவில்லை. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டாலும் அவருக்கு மீண்டும் இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு அவருடைய இடத்தை உறுதி செய்து கொண்டார்.

இந்த வகையில் அதேபோல் ஒரு வாய்ப்பை சஞ்சு சாம்சனுக்கு மட்டும் கொடுத்திருந்தால் அவர் அடுத்த தோனி என்ற லெவலுக்கு வந்திருப்பார். எனினும் தமக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சிரித்த முகத்தில் சஞ்சய் சாம்சன் இதுவும் கடந்து போகும் என்று கடந்து வருகிறார். இந்த நிலையில் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் பங்கு பெறுவதற்காக திருவனந்தபுரம் வந்திருந்தது.

அப்போது இந்திய வீரர்கள் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது பின்னால் இருந்த சுவற்றில் சாம்சன் ஓவியம் வரையப்பட்டிருந்தது. இந்திய அணியில் இல்லை என்றாலும் சஞ்சு சாம்சன் கேரளாவில் எங்கு திரும்பினாலும் இருப்பார் என்பதை இந்த ஒற்றை புகைப்படம் காட்டிவிட்டது. இது சஞ்சு சாம்சனின் கோட்டை வாய்ப்புக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் தாம் எப்போதுமே கிங் தான் என்பதை சொல்லும் அளவுக்கு இந்த புகைப்படம் இருப்பதாக அவருடைய ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

ஒரு மிகப்பெரிய தமிழ் படத்தில் மாஸ் காட்சி இருப்பது போல் இந்த ஒற்றைப் படம் பேசுவதாக ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் சஞ்சு சாம்சனையும் கிரிக்கெட்டையும் பிரிக்க முடியாத படி இந்த புகைப்படம் அமைந்து விட்டதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Story first published: Tuesday, October 3, 2023, 17:41 [IST]
Other articles published on Oct 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+