Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பல அணிகளில் பல பொறுப்பு கொடுத்தாங்க.. கடந்த ஒரு வருடமாக புது ரோல்.. சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

டெல்லி : டி20 உலககோப்பை தொடரில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை என்றாலும், அவர் தன்னுடைய எதிர்காலத்தை தென்னாப்பிரிக்க தொடர் மூலம் பிரகாசமாக்கி கொண்டார்.

டி20 அணியின் முக்கிய வீரராக சஞ்சு சாம்சன் விளங்கினாலும், உலககோப்பை அணியில் தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் இருந்ததால், அவருக்கு இடம் கிடைக்கவில்லை.

சஞ்சு சாம்சன் தன்னுடைய ஆட்டத்தை தற்போது தென்னாப்பிரிக்க தொடரில் காட்டியதன் மூலம் பண்ட்க்கு பதிலாக சேர்க்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சஞ்சு சாம்சன் அபாரம்

சஞ்சு சாம்சன் அபாரம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் தொடரில் சஞ்சு சாம்சன் தனி ஆளாக நின்று 86 ரன்களை விளாசினார். இதில் கடைசி ஓவரில் மட்டும் வெற்றிக்கு 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் அவர் 20 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து 2வது ஒருநாள் போட்டியிலும் ஆட்டமிழக்காமல் 30 ரன்கள் சேர்த்தார்.

பல பொறுப்புகள்

பல பொறுப்புகள்

சஞ்சு சாம்சனின் ஆட்டம் தோனியையே பார்த்த மாதிரி இருந்ததாக பல ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சு சாம்சன், நான் சமீப காலமாகவே பல ரோல்களுக்கு பயிற்சி செய்து வருகிறேன். பல அணிகளில் எனக்கு தொடக்க வீரர், மிடில் ஆர்டர் என பல பெறுப்பு வழங்கப்பட்டது.

ஆலோசனை பெற்றேன்

ஆலோசனை பெற்றேன்

ஆனால் , இம்முறை என்னை ஃபினிஷர் ரோலுக்கு தயாராகும் படி இந்திய அணி நிர்வாகம் கூறியது. இதனால் கடந்த ஒரு வருடமாக இந்த ரோலுக்காக பயிற்சி செய்து வருகிறேன். இதனால், இதற்கு முன் இந்த பொறுப்பில் இருந்த வீரர்களிடம் பல ஆலோசனைகளை பெற்று கொண்டு , என் ஆட்டத்தில் பயன்படுத்தினேன்.

நம்பிக்கை

நம்பிக்கை

முதல் போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்த பிறகு, அதில் உள்ள பாசிட்டிவ் விசயங்கள் குறித்து பேசினோம். அணி நிர்வாகம் எங்களுக்கு பல விசயங்களில் உதவினார்கள். நாங்கள் அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசி, எங்களுக்கு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் அளித்தனர்.

Story first published: Tuesday, October 11, 2022, 20:05 [IST]
Other articles published on Oct 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+