Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்கள் வீரர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்!இறுதிப் போட்டி சூப்பராக இருக்கும்- சஞ்சு சாம்சன் வாழ்த்து

மும்பை : ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் குவாலிஃபையர் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறியது.

இதன் மூலம் இறுதி போட்டிக்கு கொல்கத்தா அணியும் சன்ரைசர்ஸ் அணியும் பலப் பரிட்சை நடத்துகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன், எங்கள் அணியின் வீரர்கள் நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

sanju samson reveals for RR loss versus SRH in Qualifier 2

இது குறித்து பேசிய அவர், இன்றைய ஆட்டத்தில் ஆடுகளம் மிகவும் வித்தியாசமாக இரண்டாவது இன்னிங்ஸில் செயல்பட்டது. பந்து திடீரென்று திரும்பியது. இதனை பயன்படுத்திக்கொண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் சன்ரைசர்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்டு எங்களுடைய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தார்கள்.

பந்து திரும்பும் போது நாங்கள் ஸ்வீப் ஷாட் ஆடி இருக்கலாம். ஆனால் சன்ரைசர்ஸ் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த தொடரில் எங்கள் அணி பல பிரமிக்கும் வகையில் வெற்றியை பெற்றது. ஒரு அணியாக இந்த தொடர் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இந்த தொடரில் எங்கள் அணி நாட்டுக்காக இரண்டு முக்கிய வீரர்களை கண்டெடுத்து கொடுத்திருக்கிறது.

ராஜஸ்தான் ராய்ஸ்காக மட்டுமல்ல இந்திய அணிக்காகவும் சிறப்பாக விளையாடுவார்கள். இது போன்று சந்திப் சர்மாவுக்காகவும் நான் மகிழ்ச்சி கொள்கின்றேன். அவர் எங்களுக்கு ஒரு மாற்று வீரராக தான் பாதியில் வந்தார். பும்ராவுக்கு பிறகு நல்ல எக்னாமியை வைத்திருக்கும் ஒரு வீரராக திகழ்கிறார். இந்த ஆடுகளம் இறுதிப் போட்டியில் பங்கு பெறும் இரண்டு அணிக்கும் சாதகமாக இருக்கும்.

சன்ரைசர்ஸ் வீரர்கள் மிகவும் அறிவுபூர்வமாக விளையாடுகிறார்கள். அவர்கள் எதிர் அணியிடமிருந்து ஆட்டத்தை கவர்ந்து சென்று விடுகிறார்கள். கே.கே.ஆர் அணியை பார்க்கும் போதும் அவர்கள் நல்ல உத்வேகத்துடன் இருக்கிறார்கள். இதனால் இந்த தொடரில் இறுதிப் போட்டி நல்ல ஒரு பொழுதுபோக்கை கொடுக்கும் என்று சந்து சாம்சன் கூறியுள்ளார்

Story first published: Friday, May 24, 2024, 23:58 [IST]
Other articles published on May 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+