Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சஞ்சு சாம்சன் விலகல்.. இலங்கை தொடருக்காக பஞ்சாப் கிங்ஸ் வீரருக்கு திடீர் அழைப்பு..பிசிசிஐ சர்ஃப்ரைஸ்

புனே: இலங்கை அணியுடனான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து சஞ்சு சாம்சன் விலகியதை அடுத்து இந்திய இளம் வீரர் ஒருவருக்கு அழைப்பு விடுத்து ஆச்சரியம் கொடுத்துள்ளது பிசிசிஐ.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல்போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி கண்டு 1 - 0 என முன்னிலை வகிக்கிறது.

இதனையடுத்து தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது டி20 போட்டி இன்று நடைபெறவுள்ளது. புனேவில் உள்ள கிரிக்கெட் சங்க மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும்.

சாம்சன் விலகல்

சாம்சன் விலகல்

இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் புதிய குழப்பங்கள் உண்டாகியுள்ளன. சீனியர் வீரரான சஞ்சு சாம்சன் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வீரர்களும் மும்பையில் இருந்து புனேவுக்கு வந்துவிட்ட சூழலில் சாம்சன் மட்டும் மும்பையிலேயே இருந்துவிட்டார். அவருக்கு கால் மூட்டு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதால் சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.

காயம் எப்படி ஆனது?

காயம் எப்படி ஆனது?

முதல் டி20 போட்டியில் இலங்கை வீரர் பதும் நிஷங்கா அடித்த பந்தை சஞ்சு சாம்சன் பிடிக்க தவறினார். மிட் ஆஃப் திசையில் நின்றிருந்த அவர், டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் போது கீழே விழுந்தார். அப்போது நலமாக ஃபீல்டிங் செய்த போதும், முடிந்தபிறகு தான் வலியை உணர்ந்து மருத்து உதவி கேட்டிருக்கிறார். இதனால் அவர் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று வீரர் அறிவிப்பு

மாற்று வீரர் அறிவிப்பு

இந்நிலையில் சஞ்சு சாம்சனுக்கு மாற்று வீரராக இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜித்தேஷ் சர்மாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல்-ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்தாண்டு 12 போட்டிகளில் விளையாடி 234 ரன்களை விளாசினார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் 163.64 என அட்டகாசமாக இருந்தது. எனவே இவரை இந்திய அணிக்குள் சேர்த்துள்ளனர்.

13 போட்டிகளில் இல்லை

13 போட்டிகளில் இல்லை

ஜித்தேஷ் சர்மா வந்தாலும், சாம்சனின் இடத்தை ராகுல் திரிபாதி தான் நிரப்புவார் எனத்தெரிகிறது. ஐபிஎல்-ல் அதிக அனுபவம் உள்ள திரிபாதிக்கு இதுவரை 4 தொடர்களில் அழைப்பு வந்தது. ஆனால் அந்த 13 போட்டிகளிலுமே திரிபாதிக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பே கொடுக்கப்படவில்லை. அவரின் நீண்ட நாள் காத்திருப்புக்கு இன்று முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, January 5, 2023, 9:21 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+