Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி கிடைத்த அதே பெருமை.. சஞ்சு சாம்சந்-காக அதிர்ந்த சேப்பாக்கம் மைதானம்.. இணையத்தை கலக்கும் வீடியோ

சென்னை: நியூசிலாந்து அணியுடனான போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

Sanju Samson-ன் Mass Entry! Chepauk Crowd ஆரவாரத்தோடு வரவேற்பு | Aanee's Appeal |

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து ஏ அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

இந்திய அணி வெற்றி

இந்திய அணி வெற்றி

இந்த போட்டியில் நியூசிலாந்து அணியை இந்திய ஏ அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40.2 ஓவர்களில் 167 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஷர்துல் தாக்கூர் 4 விக்கெட்களை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் (29) ராஜத் பட்டிதார் (45 ) ஆகியோரின் அதிரடியால் வெற்றி கண்டது.

சூப்பர் வரவேற்பு

இந்நிலையில் இப்போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்ட வரவேற்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கம் மைதானத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கிய போது, "சஞ்சு... சஞ்சு.. சஞ்சு.." என கோஷங்களை எழுப்பி வரவேற்றனர். இந்த மைதானத்தில் எம்.எஸ்.தோனிக்கு தான் இது போன்ற சிறப்பு கிடைத்துள்ளது. தற்போது சஞ்சுக்கு வழங்கப்பட்டது, தோனியையே பார்த்தது போன்று இருந்தது.

கடைசி நேர சிக்ஸர்

கடைசி நேர சிக்ஸர்

ரசிகர்களின் ஆதரவுக்கு ஏற்றவாறு சஞ்சு சாம்சனும் ஒரு முக்கிய விஷயத்தை செய்தார். இந்தியா 103/3 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது, களமிறங்கிய சஞ்சு சாம்சன், நிதானமாக விளையாடி அணியை கரை சேர்த்தார். மேலும் தோனியை போலவே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை சஞ்சு சாம்சன் முடித்து கொடுத்தார்.

என்ன காரணம்

என்ன காரணம்

அக்டோபரில் வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் அவருக்கு அதரவாக ரசிகர்கள் சமூகவலைதளங்களில் போர்க்கொடி தூக்கினர். இதன் காரணமாக தான் தற்போது சஞ்சு சாம்சனுக்கு வரவேற்புகள் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, September 23, 2022, 13:04 [IST]
Other articles published on Sep 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+