அந்த ஒரு பந்து.. சஞ்சு சாம்சன் யோசிக்காமல் செய்த விஷயம்.. ச்ச இந்திய அணி ஜெயிச்சிருக்கலாம் - எப்படி?
லக்னோ: சஞ்சு சாம்சன் ஒரே ஒரு பந்தில் எடுத்த தவறான முடிவால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது.
இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது.
மழையின் காரணமாக 40 ஓவர்களாக குறைக்கப்பட்ட இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 249 / 4 ரன்களை குவித்தது.

இந்திய அணி தோல்வி
கடின இலக்கை துரத்திய இந்திய அணி 51 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து தடுமாறிய போது சஞ்சு சாம்சன் காப்பாற்றினார். 63 பந்துகளை சந்தித்த 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 86 ரன்களை விளாசினார். இவருக்கு உறுதுணையாக ஸ்ரேயாஸ் ஐயர் 50 ரன்கள் மற்றும் ஷர்துல் தாக்கூர் 33 ரன்களும் சேர்க்க இந்தியா வெற்றி பெற்றுவிடும் என ரசிகர்கள் நினைத்தனர். எனினும் 240 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

ஒரே ஒரு பந்து
இந்நிலையில் ஒரே ஒரு பந்து தான் இந்தியாவின் தோல்விக்கு காரணமாக இருந்தது என்றால் நம்ப முடிகிறதா? ஆட்டத்தின் கடைசி 2 ஓவர்களில் இந்திய அணிக்கு 37 ரன்கள் தேவை என்ற சூழல் இருந்தது. அப்போது ஸ்ட்ரைக்கில் ஆவேஷ் கான் இருக்க, மறுமுணையில் சஞ்சு சாம்சன் நின்றிருந்தார். முதல் இரண்டு பந்துகளையும் தூக்கி அடிக்க முயன்று மிஸ் செய்துவிட்டார்.

சஞ்சுவின் தவறான முடிவு
3வது பந்தை அவுட் சைஃப் ஆஃப் திசையில் வீச ஆவேஷ் கான் இந்த முறை தூக்கி அடித்துவிட்டார். அப்போது சிங்கிள் எடுத்து சஞ்சு சாம்சன் ஸ்ட்ரைக்கிலேயே நின்றிருக்கலாம். ஆனால் அவசரப்பட்ட அவர் ரன் கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் 2 ரன்களை ஓடிவிட்டார். இதனால் அடுத்த மூன்று பந்துகளும் அவர் நான் ஸ்ட்ரைக்கிலேயே அவர் நிக்க, அடுத்தடுத்து விக்கெட்கள் தான் விழுந்தது.

10 ரன்கள் குறைவு
கூடுதலாக ஒரு ரன்னுக்கு ஆசைப்பட்ட அந்த ஓவரில் வெறும் 7 ரன்களே சென்றது. ஆவேஷ் கான் 4 பந்துகளை எதிர்கொண்டு வீணடித்துவிட்டார். இந்திய அணிக்கு வெற்றி பெற 10 ரன்கள் குறைவாக இருந்தது. ஒருவேளை அந்த இடத்தில் சிங்கிள் எடுத்திருந்தால், சஞ்சு சாம்சன் ஏதேனும் செய்திருக்கலாம் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications