ஆசிய கோப்பை 2025: சஞ்சு சாம்சன் விசயத்தில் தவறு நடக்க போகுது.. வார்னிங் தந்த முன்னாள் வீரர்
மும்பை: இந்திய டி20 அணியில் சஞ்சு சாம்சனுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆகத்தான் இடம் கிடைக்குமே தவிர தொடக்க வீரராக வருவதற்கு வாய்ப்பு இல்லை என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.அபிஷேக் ஷர்மா தொடக்க வீரராக தன்னுடைய இடத்தை ஏற்கனவே உறுதி செய்த நிலையில் தற்போது சுப்மன் கில் அணியில் திரும்பி இருப்பதன் மூலம் அவர்தான் தொடக்க வீரராக வரவுள்ளார்.
இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி எவ்வாறு இருக்கும். அதில் உள்ள குறை என்ன என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என்னை பொருத்தவரை தொடக்க வீரராக சஞ்சு சாம்சனுக்கு தான் வாய்ப்பு வழங்க வேண்டும்ம் ஏனென்றால் கடைசியாக விளையாடிய 12 போட்டிகளில் மூன்று சதம் அடித்திருக்கின்றார்.

அது மட்டும் இல்லாமல் இந்த அணியில் அவர் முக்கிய பங்காற்றி வருகிறார். எனவே அவரை தான் நம்பர் ஒன் வீரராக அணியில் விளையாட வைக்க வேண்டும். முதல் மூன்று இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கி 140 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 6000 ரன்ளை குவித்திருக்கிறார்கள். முதல் மூன்று இடத்தில் இவ்வாறு ரன்கள் வைத்திருப்பது தான் அணிக்கு நல்லது.
ஒருவேளை சஞ்சு சாம்சனை விக்கெட் கீப்பராக அணியில் பயன்படுத்தினால் கூட அவரை நம்பர் மூன்றாவது வீரராக பயன்படுத்த வேண்டும். ஒருவேளை சஞ்சு சாம்சனை நடுவரிசையில் பயன்படுத்த வேண்டும் என்றால் அவர் நம்பர் நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடம் வரை 98 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் அவருடைய சராசரியை 20 தான். ஸ்ட்ரைக் ரேட் 126 என்ற அளவில் இருக்கின்றது.
எனவே நடுவரிசையில் சஞ்சு சாம்சன் விளையாடிய
போது அவருடைய சராசரியும் நன்றாக இல்லை. ஸ்ட்ரைக் ரேட்டும் நன்றாக இல்லை. எனவே டாப் 3 பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனை பயன்படுத்த வேண்டும். ஒருவேலை அவருடைய பேட்டிங் வரிசையை மாற்றினால் நிச்சயம் அது பாதகத்தையே ஏற்படுத்தும்.
இதேபோன்று ராகுல், இந்திய அணிக்காக அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடக்கூடிய வீரராக இருக்கின்றார்.
அவருக்கு இரண்டாவது ஒரு வாய்ப்பை தரலாம். அப்படி வழங்கப்பட்டால் ராகுல் முதல் மூன்று இடத்தில் பேட்டிங்கில் களமிறங்கி சராசரியாக 43 ரன்கள் அடித்திருக்கிறார். அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 137 என்ற அளவில் இருக்கின்றது. தற்போது மாறிவரும் டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்டரைக் ரேட் கொஞ்சம் அதிகமாக இருக்க வேண்டும்.
அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் சராசரி 42 என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக நான் கருதுகின்றேன். ஆனால் இதேபோன்று ராகுல் நான்காவது இடத்திலிருந்து ஏழாவது இடத்தில் வரை பேட்டிங் செய்தால் கூட அவருடைய சராசரி 40 என்று அளவிலும் ஸ்ட்ரைக் ரேட் 133 என்ற அளவில் இருக்கின்றது என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications