Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"Loyalty Matters" வம்புக்கு இழுத்த ஆர்சிபி ரசிகர்கள்.. சாஹல், கெய்ல் எங்கே? பொளந்து கட்டும் சிஎஸ்கே!

பெங்களூர்: சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கும் சூழலில், ஆர்சிபி ரசிகர்கள் வேண்டுமென்றே சிஎஸ்கே அணியின் ரசிகர்களை வம்புக்கு இழுத்தனர். இதனையடுத்து சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆர்சிபி அணியின் ரசிகர்களை, விஸ்வாசத்தை பற்றி நீ பேசலாமா என்று பொளந்து கட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடருக்கான ரிடென்ஷன் பட்டியல் வெளியாகவிருக்கும் நிலையில், இன்று காலை சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான டிரேட் ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அதன்படி ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி டிரேட் மூலமாக வாங்கியுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணியில் இருந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் இருவரையும் விட்டுக் கொடுத்துள்ளது.

Sanju Samson Trade

சிஎஸ்கே அணிக்காக 12 ஆண்டுகளாக ரவீந்திர ஜடேஜா விளையாடி வரும் சூழலில், சென்னை அணியின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் ஜடேஜாவை விட்டுக் கொடுத்திருக்க கூடாது என்றும் கூறி வருகின்றனர். என்னதான் நடந்தாலும் சிஎஸ்கே அணி ஒரு குடும்பத்தை போன்றது என்றும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பதிவிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் டிரேட் அறிவிப்பு ட்வீட்டை பகிர்ந்து ஆர்சிபி அணி ரசிகர்கள், "விஸ்வாசம் ரொம்ப முக்கியம்" என்று பதிவிட்டு டிரெண்ட் செய்தனர். இதையடுத்து சிஎஸ்கே அணி ரசிகர்கள் சோசியல் மீடியாவை ஆர்சிபி அணியையும், ரசிகர்களையும் விளாசி வருகின்றனர். ஏனென்றால் ஆர்சிபி அணி கொஞ்சம் கூட கவலையின்றி பலரையும் அணியில் இருந்து விடுவித்துள்ளது.

கிறிஸ் கெய்ல், சாஹல், முகமது சிராஜ், கேஎல் ராகுல், மேக்ஸ்வெல், டூ ப்ளசிஸ், வாட்சன், மொயின் அலி, வாஷிங்டன் சுந்தர், ஹர்சல் படேல், ஹசரங்கா என்று ஆர்சிபி அணிக்கு விஸ்வாசமாக இருந்த பலரையும் விடுவித்தது. இதனால் இந்த வீரர்களிடம் எல்லாம் உங்களுக்கு விஸ்வாசமாக இல்லையா? அல்லது ஆர்சிபி அணி விஸ்வாசமாக இல்லையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதேபோல் 18 ஆண்டுகளுக்கு பின் ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ள நிலையில், ஆர்சிபி அணியே விற்பனை செய்யப்பட உள்ளது. அதற்காக பலரும் முயற்சித்து வரும் சூழலில், மார்ச் மாதம் இறுதியில் ஆர்சிபி அணியை யார் வாங்கியுள்ளனர் என்பது தெரிய வரும் என்று தகவல் வெளி வந்துள்ளது.

Story first published: Saturday, November 15, 2025, 15:48 [IST]
Other articles published on Nov 15, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+