சஞ்சு சாம்சன் மனைவி போட்ட இன்ஸ்டா பதிவு.. இரு பிரிவாக அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.. என்ன காரணம்?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி வீரர் சஞ்சு சாம்சன் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பதிவால் ரசிகர்கள் இரு புறமாக பிரிந்து வாக்குவாதம் செய்து வருகின்றனர்.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரராக திகழ்ந்து வருபவர் சஞ்சு சாம்சன் தான். இவர் இந்திய அணிக்காக பெரியளவில் விளையாடவில்லை என்றாலும் ரசிகர் பட்டாளம் மட்டும் விராட் கோலி அளவிற்கு ஏக போகத்திற்கு உள்ளது.
சஞ்சுவுக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் இருப்பதற்கு காரணமே அவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருப்பதனால் தான் என்றால் நம்ப முடிகிறதா?.. ஆம் நல்ல திறமை இருந்தும் புறக்கணிக்கப்பட்டு வரும் வீரர் அவர்.

இன்ஸ்டா பதிவு
இந்நிலையில் சஞ்சு சாம்சனின் மனைவி போட்ட கிறிஸ்துமஸ் பதிவு ஒன்றால் அவரின் ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். அதாவது கிறிஸ்துமஸ் மரத்திற்கு அருகே சஞ்சு சாம்சனும் அவரது மனைவி சாருலதாவும் ஜோடியாக நிற்பது போல புகைப்படத்தை பதிவிட்டு, அதில், அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் குழப்பம்
இதனை பார்த்த ரசிகர்கள் சஞ்சு சாம்சன் அப்பா ஆகப்போகிறாரோ? என கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாக மனைவி கர்ப்பிணியாக இருந்தால், வயிற்றில் கைவைத்து செய்தியை அறிவிப்பார்கள். அதே போன்று தான் நேற்று சஞ்சு சாம்சன் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனால் தான் ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.

தொடர்ந்து புறகணிப்பு
ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன், ஓப்பனிங், முதல் விக்கெட், லோயர் ஆர்டர் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஆடக்கூடிய வீரர் ஆகும். ஆனால் ரிஷப் பண்ட் இடதுகை வீரராக உள்ளார் என்ற ஒரே காரணத்திற்காக சஞ்சு சாம்சன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார். இதற்காக ரசிகர்கள் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இலங்கை தொடரில் வாய்ப்பு
இது ஒருபுறம் இருக்க, சஞ்சு சாம்சனுக்கு வரவுள்ள இந்தியா - இலங்கை தொடரின் போது வாய்ப்பு கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் இந்தியாவுக்கு வரவுள்ள இலங்கை அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதவுள்ளது. இதற்கான இரண்டு அணிகளிலுமே சஞ்சு சாம்சன் இருப்பார் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications