2026 டி20 உலககோப்பையில் சாம்சன் இருக்க மாட்டார்.. காரணம் விராட் கோலி கொண்டு வந்த ரூல் தான்
மும்பை : டி20 உலக கோப்பை வரலாற்றில் இதுவரை எந்த ஒரு அணியும் தொடர்ந்து இரண்டு முறை உலக கோப்பையை வென்றதில்லை. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் வென்ற இந்திய அணி அடுத்த டி20 உலக கோப்பையை தங்களது சொந்த மண்ணில் விளையாடுகிறது.
இதன் மூலம் டி20 வரலாற்றில் புதிய சாதனையை படைக்க இந்தியாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இதற்கான இந்திய அணியை தற்போது இருந்து தயார் படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் பிசிசிஐ இருக்கின்றது.

இதற்கு காரணம் விராட் கோலி, ரோகித் சர்மா ஜடேஜா போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாத நிலையில் அவர்களுக்கான மாற்று வீரர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு போதிய போட்டியில் விளையாடி ஒரு அணியாக உருவாக்க பிசிசிஐ யோசித்து வருகிறது. இந்த சூழலில் 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றாலும் களத்தில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த நிலையில் சஞ்சு சாம்சன் தற்போது 29 வயது ஆகிறது. அடுத்த டி20 உலக கோப்பை வருவதற்குள் அவருக்கு 31 அல்லது 32 ஆகிவிடும். இதனால் அவர் அடுத்த டி20 உலக கோப்பையில் விளையாடுவாரா இல்லை ரிஷப் பந்த் அல்லது இஷான் கிஷன் போன்ற வீரர்களுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் டி20 போட்டிகளில் இனி வயதான வீரர்கள் விளையாட கூடாது என விராட் கோலி ஒரு ரூல் கொண்டு வந்ததாக அமித் மிஸ்ரா கூறி இருக்கிறார். இந்த விதியின் காரணமாக பல மூத்த வீரர்கள் அணியில் சேர்க்கப்படவில்லை என்று சுட்டிக் காட்டிய அமித் மிஸ்ரா, இந்த ரூல் காரணமாக அடுத்த டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இடம் பெறாமல் போகலாம் என்றும் கூறியிருக்கிறார்.
டி20 உலக கோப்பை இளம் வீரர்களுக்கானது என்ற மனநிலை உருவாக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அமித் மிஸ்ரா, ஆனால் 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் சேவாக், யுவராஜ், தோனி, ஹர்பஜன் தான் கோப்பையை வென்று கொடுத்தார்கள் என்றும் தற்போது நடைபெற்ற டி20 உலக கோப்பையில் கூட விராட் கோலி, ரோஹித், பும்ரா ஹர்திக் பாண்டியா தான் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்ததாகவும் அமித் மிஸ்ரா சுட்டிக்காட்டி உள்ளார். இதன் காரணமாக அனுபவ வீரர்களின் முக்கியத்துவம் டி20 கிரிக்கெட் வேண்டும் என்றும் அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications