For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பாகிஸ்தானுக்கு பலத்த அடி.. "முரளிதரனாக" மாறினார் சக்லைன் முஷ்டாக்!

லண்டன்: பாகிஸ்தானின் ஜாம்பவான் ஆப் ஸ்பின்னர் சக்லைன் முஷ்டாக், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சு ஆலோசகராக மாறியுள்ளார். என்ன விசேஷம் என்றால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத்தான் சக்லைனை அது ஆலோசகராக்கியுள்ளது.

பாகிஸ்தான் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. ஆனால் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அட்டகாசமாக வென்று விட்டது. இந்தப் போட்டியில்தான் சக்லைன் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இங்கிலாந்து அணியுடன் இணைந்தார் என்பது இன்னும் சுவாரஸ்யமானது.

இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர்களான மொயீன் அலி மற்றும் லேக் பிரேக் பவுலர் அதில் ரஷீத் ஆகியோருக்கு பல டிப்ஸ்களை கொடுத்து அவர்களது பந்து வீச்சுக் குறைபாடுகளைச் சரி செய்தார் சக்லைன். இது இங்கிலாந்து அணிக்கு நல்ல பலனைக் கொடுத்தது. 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 330 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை பந்தாடியது என்பது நினைவிருக்கலாம்.

4 டெஸ்ட் போட்டிகள்

4 டெஸ்ட் போட்டிகள்

4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் இது. லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தானும், ஓல்ட் டிராபோர்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் இங்கிலாந்தும் வென்றதன் மூலம் இந்தத் தொடர் தற்போது சமனாகியுள்ளது.

சக்லைன் vs முஷ்டாக் அகமது

சக்லைன் vs முஷ்டாக் அகமது

சக்லைன் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இருந்து வரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக இன்னொரு ஸ்பின் ஜாம்பவான் முஷ்டாக் அகமது இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முரளிதரன் போல

முரளிதரன் போல

இப்படித்தான் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முத்தையா முரளிதரனை ஆலோசகராக நியமித்தது ஆஸ்திரேலியா அணி. ஆனால் அது இலங்கையில் பெரும் பிரச்சினையைக் கிளப்பியதைத் தொடர்ந்து முரளிதரன் அந்த பொறுப்பிலிருந்து விலகி விட்டார். அதேபோல தற்போது இங்கிலாந்தும் பாகிஸ்தான் பந்து வீச்சு ஜாம்பவானை கையில் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இங்கு சண்டை இல்லோ.. சந்தோஷம்தான்

இங்கு சண்டை இல்லோ.. சந்தோஷம்தான்

ஆனால் முரளிதரன் விவகாரம் போல இங்கு பிரச்சினை ஏதும் வரவில்லை. மாறாக இரு தரப்பும் சுமூகமாக பழகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2010ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் பாகிஸ்தான் இங்கிலாந்துக்கு வந்துள்ளதால், இரு அணிகளும் இந்தத் தொடரை முக்கியமாக நினைக்கின்றன.

சூதாட்ட சர்ச்சைக்குப் பிறகு

சூதாட்ட சர்ச்சைக்குப் பிறகு

2010ல் நடந்த தொடரின்போதுதான் பாகிஸ்தான் வீரர்கள் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக பெரும் புயல் கிளம்பியது. அந்தக் களங்கத்தைத் துடைக்க பாகிஸ்தான் அணிக்கு இந்தத் தொடரை வெல்வது முக்கியமாக மாறியுள்ளது. எனவேதான் அவர்கள் ஆக்ரோஷமாக ஆடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 28, 2016, 15:40 [IST]
Other articles published on Jul 28, 2016
English summary
Pakistan's legendary spinner Saqlain Mushtaq is working as England spin guru in the test series against Pakistan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+