Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அர்ஜூன் டெண்டுல்கர்.. என் செல்லக்குட்டி தம்பிக்கு கண் திருஷ்டி பட்டு விடக் கூடாது.. அக்கா சாரா நெகிழ்ச்சி

மும்பை: சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா, தனது சகோதரர் அர்ஜுன் டெண்டுல்கர் மற்றும் சானியா சந்தோக்கின் திருமணப் படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மும்பையில் நடந்த விழாவில், கிரிக்கெட், சினிமா, வணிகத் துறை பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

அர்ஜுன், சானியாவின் திருமணம் மும்பையில், இந்தியாவின் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு சில மணிநேரங்களுக்கு முன் நடந்தது. இந்த நிகழ்வுக்குப் பின், சாரா தனது சகோதரருக்கும் , அவரின் மனைவிக்கும் தனது அன்பான வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்திருந்தார்.

திருமணக் கொண்டாட்டங்களின் இதுவரை வெளியாகாத படங்களை சாரா தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தெற்கு மும்பையில் உள்ள ஆடம்பர, அரங்கில் நடந்த இந்த விழாவில், பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

சாரா இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத் தொகுப்பை வெளியிட்டார். அதில், கொண்டாட்டங்களின் நெகிழ்ச்சியான தருணங்கள் இடம்பெற்றிருந்தன. அர்ஜுன், சானியாவின் நெற்றியில் சிந்துர் இடும் முக்கியச் சடங்கின்போது மலர்ந்த முகத்துடன் இருப்பதும் இடம்பெற்றிருந்தது.

சாரா தனது பதிவில், "என் செல்லத் தம்பி இப்போது சானியாவுக்கு சொந்தமாகிவிட்டான். உங்கள் இருவருக்கும் எல்லையற்ற ஆசீர்வாதங்களையும், செழிப்பையும், உங்கள் இதயம் விரும்பும் அனைத்தையும் பொழியட்டும். நிச்சயமாக, உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களை கண் திருஷ்டியில் இருந்து பாதுகாக்கட்டும் " என்று நெகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்.

மீதமுள்ள புகைப்படங்கள், சாரா தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சகோதரருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டங்களை அனுபவித்த இயல்பான தருணங்களை படம்பிடித்துள்ளன. சாரா தனது கமேண்டில், "எனக்கு ஒரு சகோதரியை அளித்ததற்கு கடவுளுக்கு நன்றி ," என்று மேலும் குறிப்பிட்டிருந்தார்.

சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த தொழில்முனைவோர் ஆவார். ஆடம்பர செல்லப்பிராணி பராமரிப்பு பிராண்டான 'மிஸ்டர் பாஸ் பெட் ஸ்பா அண்ட் ஸ்டோர் எல்.எல்.பி'யின் பங்குதாரர். சன்னி, கௌரிகா காய் சந்தோக்கின் மகள். கிராவிஸ் குழுமத் தலைவர் ரவி காயின் பேத்தியும் ஆவார்.

அர்ஜுன், சானியாவின் உறவு மும்பையின் சமூக வட்டங்களில் பல ஆண்டுகளாக வளர்ந்துள்ளது. இரு குடும்பங்களும் நீண்ட காலம் பழகியவர்கள். சானியாவின் தாத்தா ரவி காய், கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் நீண்டகால நட்பு கொண்டுள்ளார்.

Story first published: Friday, March 13, 2026, 13:25 [IST]
Other articles published on Mar 13, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+