Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

PSL 2021: ஏர்போர்ட் வரை வந்தாச்சு.. திருப்பி அனுப்பிய அதிகாரிகள் - "கேப்டன்" என்று சொல்லியும் விடல

Lahore: பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கில் ஒரு புது சிக்கல் எழுந்துள்ளது. அணியின் கேப்டனையே விமான நிலைய அதிகாரிகள் தடுத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

Recommended Video

PSL 2021: Pakistan Captainஐ திருப்பி அனுப்பிய Airport அதிகாரிகள் | OneIndia Tamil

பாகிஸ்தான் ப்ரீமியர் டி20 கிரிக்கெட் தொடரின் 6வது சீசன் கடந்த பிப். 20ம் தேதி தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த தொடரில் திடீரென வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மொத்தமுள்ள 34 போட்டிகளில் இதுவரை 14 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் 20 போட்டிகள் உள்ளன.

அபுதாபி

அபுதாபி

இதனையடுத்து ஐபிஎல்-ஐ போன்று பிஎஸ்எல் தொடரையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 5ம் தேதி முதல் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் தொடங்குகிறது.

இதற்காக, அனைத்து அணி வீரர்களும் மே 26ம் தேதி அபுதாபி புறப்பட்டனர்.

 கமர்ஷியல் ஃபிளைட்

கமர்ஷியல் ஃபிளைட்

இந்நிலையில், முன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது உட்பட 11 வீரர்களுக்கு அபுதாபி செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நேற்று (மே.30) அபுதாபிக்கு கமர்ஷியல் விமானங்களில் செல்ல அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மும்பை மற்றும் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து தரையிறங்கும் சார்ட்டர் விமானங்களுக்கு விசாக்கள் மற்றும் அனுமதிகளைப் பெறுவது உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது.

 தோஹா வழியாக

தோஹா வழியாக

இதுகுறித்து ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள செய்தியில், "குவெட்டா கிளாடியேட்டர்ஸ் கேப்டன் சர்பராஸ் அகமது உட்பட 11 வீரர்கள் மற்றும் பிஎஸ்எல் அதிகாரிகள், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லாகூர் மற்றும் கராச்சியில் இருந்து தோஹா வழியாக அபுதாபிக்கு செல்லும் கமர்ஷியல் விமானங்களில் ஏற அனுமதிக்கப்படவில்லை" என்று குறிப்பிட்டுள்ளது.

 சார்ட்டர் விமானங்கள்

சார்ட்டர் விமானங்கள்

முன்னதாக கடந்த வியாழக்கிழமை, சுமார் 250 வீரர்கள், அதிகாரிகள், பிசிபி ஊழியர்கள், ஒளிபரப்பாளர்கள் மற்றும் அவர்களது ஊழியர்கள் இரண்டு சார்ட்டர் விமானங்கள் மூலம் கராச்சி மற்றும் லாகூரிலிருந்து கிளம்பி அபுதாபி சென்றடைந்த நிலையில், தற்போது சர்ப்ராஸ் உள்ளிட்ட சில வீரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Story first published: Monday, May 31, 2021, 14:30 [IST]
Other articles published on May 31, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+