இது பந்து இல்ல, பர்கர்.. அதான் பிடிச்சிட்டாரு.. சர்பிராசை கலாய்த்து தள்ளிய ரசிகர்கள்..!!
பர்மிங்ஹாம்: நியூசிலாந்துக்கு எதிரான முக்கிய போட்டியில், பாக். கேப்டன் சர்பிராஸ் அகமதுவின் அசத்தல் கேட்ச் அருமையாக இருந்தாலும், ரசிகர்கள் பர்கருடன் அதை ஒப்பிட்டு கலாய்த்து தள்ளிவிட்டனர்.
இங்கிலாந்தில்உலககோப்பை கிரிக்கெட் தொடர் முக்கிய கட்டத்தை எட்டியிருக்கிறது. பர்மிங்ஹாமில் 33வது லீக் போட்டியில் டாசில் ஜெயித்த நியூசிலாந்து, முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. ஆனால், அந்த முடிவு தவறு என்று அவர்களுக்கு அப்போது தெரியாது.
இரு அணிகளிலும் வீரர்களின் அறிவிப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. கடந்த போட்டிகளில் விளையாடிய வீரர்களே விளையாடுகின்றனர். முன்னதாக மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மைதானத்தை முழுமையாக தயார் செய்த பின் 1 மணி நேரம் கழித்து போட்டி தொடங்கியது.

விக். இழப்பு
இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்துக்கு அதிர்ச்சியோ, அதிர்ச்சி. மிரட்டல் பேட்டிங்கால் அசத்தும் என்று எதிர்பார்த்தால், 54 ரன்களுக்கு 4 விக்கெட்டை பறிகொடுத்து தடுமாறியது. இந்த போட்டியில் நியூசி. வீரர் டெய்லருக்கு, பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது மிரட்டலான கேட்ச் ஒன்றை பிடித்து அசத்தினார்.
கேலி, கிண்டல்
இந்த போட்டியில் மிகச் சிறந்த கேட்ச் என்றாலும், சர்பிராசை டுவிட்டரில் ஏகத்துக்கும் கிண்டலடித்துள்ளனர். அதிலும் உலக கோப்பையில் யாரும் மறக்க முடியாத பர்கர் சமாச்சாரத்தை ஒப்பிட்டு ஒருவர் டுவிட்டரில் கலாய்த்துள்ளார். அவர் கையில் இருப்பது பந்து அல்ல... பர்கர் என்பதால் தான் தாவி பிடித்தார் என்று கலாய்த்திருப்பது தான் நச்.
மறக்க முடியாத கொட்டாவி
மற்றொருவரரோ... இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விட்ட கொட்டாவியை ஞாபகப்படுத்தி இருக்கிறார். இப்படி இருப்பார்னு பாத்தா... இப்டி இருக்கிறாரே என்று இரண்டு போட்டோவையும் போட்டு ஏகத்துக்கும் காமெடி செய்திருக்கிறார்.

விடாத ரசிகர்கள்
என்ன இருந்தாலும், ரசிகர்கள் டுவிட்டரில் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். இந்திய அணிக்கு எதிரான தோல்விக்கு முதல் நாள் பார்ட்டி, மழை குறுக்கீடுக்கு பின் கொட்டாவி விட்டது என சர்பிராசை ரசிகர்கள் விடுவதாக இல்லை என்பது இந்த கலாய் டுவிட்டர்களில் புரிந்து கொள்ள முடிகிறது.


Click it and Unblock the Notifications