மறுபடி… மறுபடி… அதே தப்பை பண்ணி தொலைத்த சர்பிராஸ்..! என்னப்பா கேப்டன்சி இது? #INDvsPAK
Recommended Video
மான்செஸ்டர்: தொடர்ந்து சொதப்பலாக பவுலிங் போடுபவருக்கே மீண்டும், மீண்டும் பாக். கேப்டன் சர்பிராஸ் ஓவர் கொடுத்திருப்பது, பாக். ரசிகர்களை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
டாசில் வென்று ஏன் சர்பிராஸ் பவுலிங்கை தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் பாக். ரசிகர்களுக்கு புரியாத புதிராக இருக்கிறது. சரி... பவுலிங்கில் இந்தியாவை மிரள வைப்பார்கள் என்று தேசிய கொடியும், ஸ்டேடியத்தில் உற்சாகமாக ஆரவாரம் செய்து கொண்டிருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் பொருமி தள்ள ஆரம்பித்திருக்கின்றனர்.
இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் பலமானது என்று இனியும் யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. எனவே, டார்க்கெட் இல்லாமல் இந்தியாவை பேட் செய்ய சொன்னது மாபெரும் தவறு. பரவாயில்லை.. பவுலிங்கில் பட்டையை கிளப்பும் என்று எதிர்பார்த்தால் எல்லாமே சொதப்பல்.

136 ரன்கள்
பவுலர்களிடம் இருந்து விக்கெட்டுகளை எதிர்பார்க்க வேண்டும். அதுதான் ஒரு ஆட்டத்தின் வெற்றியை தீர்மானிக்கும். ஆனால்... பாக். பவுலிங் முகாமிலோ நடந்த கதையே வேறு. முதல் விக்கெட்டுக்கு இந்தியா சேர்த்த ரன்கள் 136.

சொதப்பல் பவுலிங்
டக்கரான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல், ரோகித் கூட்டணி வலுவான தொடக்கத்தை அமைத்திருக்கிறது. இந்த ஜோடியை பிரிக்கிறேன் பேர்வழி என்று பவுலிங் யூனிட்டையே சொதப்பி இருக்கிறார் கேப்டன் சர்பிராஸ்.

திரும்பவும் வாய்ப்பு
குறிப்பாக ஹசன் அலிக்கு திரும்ப, திரும்ப வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அவர் வீசிய 5 ரன்களில் விட்டுக் கொடுத்திருப்பது 45 ரன்கள். லைனில் கண்ட்ரோல் இல்லாமல் அவர் பந்துவீசியதன் விளைவு தான் இது. இந்திய வலது கை பேட்ஸ் மென் ஜோடி இந்த தவறை அழகாக பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறது.

ஜொலிக்காத ஹசன் அலி
ஹசன் அலியின் பந்துவீச்சு இந்திய அணியுடனான ஆட்டத்துடன் சேர்த்து ஜொலிக்கவே இல்லை. குறிப்பாக, ரோகித் மட்டையை சுழற்றி, சுழற்றி பட்டையை கிளப்ப... ஹசன் அலியின் கைகளிலேயே திரும்ப, திரும்ப பந்தை கொடுத்தார் சர்பிராஸ்.

தவறிய சர்பிராஸ்
அமீரை, கோலிக்கு பந்து வீச செய்ய வேண்டும் என்பதற்காக, கோலி களமிறங்கும்வரை அவரைப் பயன்படுத்தவே இல்லை. முன்பே பயன்படுத்தி விக்கெட் வீழ்த்துவது தான் கேப்டனின் புத்திசாலித்தனம். அதை செய்ய சர்பிராஸ் தவறிவிட்டார். மாலிக் போன்ற புதியவரையாவது குறைந்த பட்சம் களத்தில் பந்துவீச பயன்படுத்தியிருக்கலாம். ஆக மொத்தம்... சர்பிராசின் பவுலிங் கோட்டையில் பெரிய ஓட்டை...வேறென்ன சொல்ல..!!


Click it and Unblock the Notifications