Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஃபராஸ் கானுக்கு ஜாக்பாட்.. இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் வாய்ப்பு.. இலங்கை தொடரில் சேர்ப்பு

மும்பை: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து காயம் காரணமாக சாய் சுதர்சன் நீக்கப்பட்டதை அடுத்து, மும்பையை சேர்ந்த சர்ஃபராஸ் கான் இந்திய டெஸ்ட் அணியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

இந்தத் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் சேர்க்கப்பட்டிருந்தார். அவர் வலது கால் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காயத்தால் அவதியுற்று வந்தார். பிசிசிஐ சிறப்பு மையத்தில் நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் அவரால் வேகமாக ஓட முடியாததால், இந்தத் தொடரில் இருந்து அவர் அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டார்.

Sarfaraz Khan announced as replacement for Sai Sudharsan in Indian test team for Sri Lanka series

அவருக்கு பதிலாக யாருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில் சர்ஃபராஸ் கானுக்கு நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் டெஸ்ட் அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. சர்ஃபராஸ் கான் இதுவரை இந்திய அணிக்காக 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1 சதம், 3 அரைசதங்களுடன் 371 ரன்கள் எடுத்துள்ளார். கடைசியாக 2024ல் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 150 ரன்கள் விளாசியிருந்தார். மேலும் இந்த ஆண்டு உள்நாட்டுப் போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 429 ரன்கள் குவித்து சிறந்த ஃபார்மில் உள்ளதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

இலங்கை லெவன் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 142 ரன்கள் குவித்து அசத்திய தேவ்தத் படிக்கல், 3வது வரிசையில் களம் இறங்குவது உறுதியாகியுள்ளது. இதனால் சர்ஃபராஸ் கானுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா? என்ற கேள்வி உள்ளது. ஒருவேளை அவருக்கு அணியில் இடம் கிடைத்தால் 5 அல்லது 6ஆவது வரிசையில் பேட்டிங் ஆடுவார். முன்னதாக, ஜஸ்பிரித் பும்ராவும் காயத்தால் விலகியதால் அவருக்கு பதிலாக ஆகிப் நபி சேர்க்கப்பட்டார்.

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

இந்திய அணிக்கு குட் நியூஸ்.. பயிற்சிப் போட்டியில் சுப்மன் கில் பேட்டிங் ஆடியதால் ரசிகர்கள் நிம்மதி

இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி: சுப்மன் கில் (கேப்டன்), கே. எல். ராகுல் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், மானவ் சுதார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிரார், தேவ்தத் படிக்கல், சரன்ஷ் ஜெயின், ஆகிப் நபி, சர்ஃபராஸ் கான்.

Story first published: Sunday, August 9, 2026, 21:46 [IST]
Other articles published on Aug 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+