Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவாஸ்கரிடம் மன்னிப்பு கேட்ட சர்பராஸ் கான்.. இனி இப்படி செய்ய மாட்டேன் என கருத்து

மும்பை : ரஞ்சி கிரிக்கெட்டில் சர்பராஸ்கான் விளையாடிக் கொண்டிருந்த காலத்தில் இருந்தே அவருக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கவாஸ்கர் உறுதுணையாக இருந்தார். சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என்று பலகாலமாக கவாஸ்கர் குரல் கொடுத்திருந்தார்.

பருமனாக இருப்பதால் அவரை சேர்க்கவில்லையா என்று கேள்வி கேட்ட கவாஸ்கர், நீங்கள் என்ன ஃபேஷன் ஷோ வா நடத்தப் போகிறீர்கள்? ஒல்லியான வீரரை தேர்ந்தெடுக்க என்று கேள்வி கேட்டார்.

Sarfaraz khan apologized to sunil gavaskar for his mistakes

இந்த நிலையில் சர்பராஸ் கான், இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்து விளையாடிய போதும் கவாஸ்கர் அவரை பாராட்டினார். இந்த சூழலில் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கான் 60 பந்துகளை எதிர் கொண்டு 56 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஸ்லிப்புக்கு மேல் அடிக்க நினைத்த சர்பராஸ்கான், ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார்.

இதை பார்த்த கவாஸ்கர் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தினார். இது குறித்து பேசிய அவர் இந்த ஷாட்டை ஆடுவதற்கான ஏற்ற பந்து இது கிடையாது. ஆனால் சர்பராஸ், இந்த தவறை செய்து தற்போது விக்கெட்டை இழந்து இருக்கிறார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு முதல் பந்தை எதிர் கொள்ளும் போது கொஞ்சம் பொறுமை காத்திருக்க வேண்டும்.

பிராட்மேன் தன்னிடம், நீ 200 ரன்களில் இருந்தால் கூட அடுத்த பந்தை சந்திக்கும் போது பூஜ்ஜியத்தில் இருக்கிறாய் என்று நினைத்துக் கொள் என்று தமக்கு அறிவுரை கூறியதாக கவாஸ்கர் குறிப்பிட்டார். ஆனால் சர்பராஸ்கான் தேநீர் இடைவெளிக்குப் பிறகு தம் எதிர்கொண்ட முதல் பந்திலே தூக்கி அடித்து ஆட்டம் இழந்து விட்டதாக கூறினார்.

இந்த நிலையில் பாட்டியா என்ற நபரை சந்தித்த சர்பராஸ் கான், தாம் கவாஸ்கர் இடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக சொல்லிவிடுங்கள். நான் அந்த தவறை செய்து விட்டேன். இனி இப்படி ஒரு தவறை செய்ய மாட்டேன் என்று கூறுங்கள் என பாட்டியாவிடம் கூறியிருக்கிறார். பெரிய ஜாம்பவான் தம் தவறை சுட்டிக்காட்டிய போது அதற்கு சர்பராஸ்கான் மன்னிப்பு கேட்டு, இனி அந்த தவறு செய்ய மாட்டேன் என்று கூறி இருப்பது ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Story first published: Tuesday, March 12, 2024, 18:04 [IST]
Other articles published on Mar 12, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+