Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்ஃபராஸ் கானை பழிவாங்கும் கம்பீர்.. இந்திய ஏ அணியில் கூட இடம் தரவில்லை.. இனி வாய்ப்பே கிடையாதா?

ஒரு காலத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் டான் பிராட்மேனுக்கு பிறகு அதிக சராசரியை வைத்திருந்த வீரராக சர்பராஸ்கான் திகழ்ந்தார். அண்டர் 19 கிரிக்கெட் காலத்திலிருந்து பல ஆண்டுகள் தனது திறமையை நிரூபித்தும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு தரப்பட்டபோது அதனை ஒட்டுமொத்த ரசிகர்களும் கொண்டாடினர். ஆனால் பயிற்சியாளராக கம்பீர் வந்த பிறகு சர்பராஸ் கானுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியில் நடப்பதை சர்ஃப்ராஸ்கான் வெளியே சொல்கிறார் என அவர் மீது பழி சுமத்தி அணியில் இருந்து கம்பீர் நீக்கினார்.

Sarfaraz khan India vs south africa Gautam Gambhir

அதன் பிறகு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பே வழங்கப்படவில்லை. எனினும் இந்திய ஏ அணியில் தொடர்ந்து விளையாடி வந்தார். இந்த தருணத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இந்த தொடருக்கு முன்னோட்டமாக இந்திய ஏ அணி, தென்னாபிரிக்கா ஏ அணியுடன் இரண்டு நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது.

இதில் டெஸ்ட் அணியில் வாய்ப்புக்காக காத்திருக்கும் ரஜத் பட்டிதார், ருதுராஜ், தேவுதட் படிக்கல் துருவ் ஜூரல் போன்ற வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதே போன்று கே எல் ராகுல் உள்ளிட்டோரும் இரண்டாவது நான்கு நாள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார்கள். ஆனால் சர்ஃபாரஸ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. சமீபகாலமாக சர்பராஸ் கான் தன்னுடைய உடல் எடையை குறைத்து இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஆனால் தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான தொடரில் அவருக்கு மீண்டும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரிக்கெட் விமர்சகர்கள், சர்பராஸ் கான் இந்திய அணியில் எப்படியாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் அவர் நம்பர் மூன்றாவது இடத்தை குறி வைக்க வேண்டும்.ஏனென்றால் சாய் சுதர்சன் இன்னும் அந்த இடத்தில் தன்னுடைய திறனை நிரூபிக்கவில்லை.

இதனால் மும்பை நிர்வாகத்துடன் பேசி சர்பராஸ்கான் மூன்றாவது வீரராக களமிறங்க வேண்டும். நடுவரிசையில் தொடர்ந்து ரஞ்சி கோப்பையில் அவர் விளையாடினால் நிச்சயம் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்காது.ஏனென்றால் வாஷிங்டன் சுந்தர், பண்ட், ஜடேஜா, நித்தீஷ்குமார் ரெட்டி போன்ற வீரர்கள் ஏற்கனவே உள்ளனர்.மேலும் துருவ் ஜுரலும் தன்னுடைய திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால் சர்பராஸ்கான் நம்பர் மூன்றாவது இடத்தை குறி வைத்து விளையாட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

Story first published: Wednesday, October 22, 2025, 8:00 [IST]
Other articles published on Oct 22, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+