For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரம்.. சதம் சதமாக அடிக்கும் சர்ஃபிராஸ் கான். வாய்ப்பு கிடைக்குமா?

ராஜ்காட் : இந்திய கிரிக்கெட்டில் புது நட்சத்திரமாக சர்ஃபிராஸ் கான் உருவாகி வருகிறார். தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் சர்பிராஸ் கான் சதம் விளாசி வருகிறார்.

நடப்பாண்டில் மட்டும் ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி, துலிப் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசிய நிலையில், இன்று இராணி கோப்பையில் சதம் அடித்திருக்கிறார்.

செளாராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 98 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இதர இந்திய அணி 18 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது.

மகளிர் ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இந்தியா அபாரம்.. இலங்கையை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள்மகளிர் ஆசிய கோப்பை.. முதல் போட்டியிலேயே இந்தியா அபாரம்.. இலங்கையை துவம்சம் செய்த இந்திய வீராங்கனைகள்

அபார ஆட்டம்

அபார ஆட்டம்

பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் களமிறங்கிய சர்பிராஸ் கான் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் திணறிய போது, இவர் மட்டும் வேற ஏதோ களத்தில் விளையாடியது போல் சுலபமாக விளையாடினார். டெஸ்ட் போட்டியில் 50 பந்தகளில் அரைசதம் கடந்த சர்பிராஸ் கான், தொடர்ந்த அதிரடியை காட்டினார்.

சர்பிராஸ் சதம்

சர்பிராஸ் சதம்

சர்பிராஸ் கான் ஆட்டநே முடிவில் 126 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இதில் 19 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும். மறுமுனையில் விஹாரி தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 145 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து இருவரும் களத்தில் ஆட்டமிழக்காமல் நின்றனர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இதர இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

அசத்தல் ரெக்கார்ட்

அசத்தல் ரெக்கார்ட்

இது சௌராஷ்டிரா அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 107 ரன்கள் கூடுதலாகும். சர்பிராஸ் கான் உள்நாட்டு கிரிக்கெட் போட்டியில் 43 இன்னிங்சில் களமிறங்கி 2892 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 10 சதங்களும், 8 அரைசதங்களுங அடங்கும். சராசரியாக ஒரு இன்னிங்சில் சர்பிராஸ் கான் 82.63 ரன்கள் அடித்திருக்கிறார்.

இந்திய அணியில் இடம்

இந்திய அணியில் இடம்

சர்பிராஸ் கான், தொடர்ந்து பட்டயை கிளப்பினாலும், இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது இந்திய அணியில் ரஹானேவுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. இதனால், சர்பிராஸ் கானுக்கு வரும் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் தேர்வுக்குழு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Story first published: Saturday, October 1, 2022, 19:52 [IST]
Other articles published on Oct 1, 2022
English summary
Sarfaraz khan century in irani cup vs Saurashtra இந்திய கிரிக்கெட்டில் புதிய நட்சத்திரம்.. சதம் சதமாக அடிக்கும் சர்ஃபிராஸ் கான். வாய்ப்பு கிடைக்குமா?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X