Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட்றா சக்க! கேஎல் ராகுலுக்கு ஆப்பு வைத்த சர்பிராஸ் கான்.. பார்டர் கவாஸ்கர் தொடரில் இடம் உறுதி

மும்பை : இந்திய கிரிக்கெட் அணி தற்போது அடுத்தடுத்து நியூசிலாந்துக்கு எதிராக மூன்று டெஸ்ட் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 டெஸ்ட் என மொத்தம் எட்டு போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் 5 போட்டிகளில் இந்தியா வென்றால் நேரடியாக யாருடைய தயவும் இல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விட முடியும்.

இந்த சூழலில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை நடுவரிசை கொஞ்சம் பலம் இல்லாமல் தெரிகிறது. கே எல் ராகுல் அண்மைக்காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறினாலும், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக அரை சதம் அடித்து தன் மீதான இருக்கும் விமர்சனத்திற்கு பதில் அளித்திருக்கிறார்.

sarfaraz khan irani cup 2024 mumbai vs rest of india ajinkya rahane shreyas iyer

எனினும் கேஎல் ராகுல் சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது என்ற குற்றச்சாட்டு இன்னும் இருக்கிறது. மேலும் ஆசிய மண்ணில் விளையாடும் போது கே எல் ராகுல் பெரிய இன்னிங்ஸ் ஆடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இராணி கோப்பை தொடரில் இதர இந்திய அணிக்கு எதிராக ஆட்டத்தில் களமிறங்கிய மும்பை வீரர் சப்ராஸ்கான் அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்திருக்கிறார்.

253 பந்துகளை எதிர்கொண்ட அவர் 200 ரன்கள் சேர்த்திருக்கிறார். இதில் 23 பவுண்டரிகள் மூன்று சிக்ச்ர்கள் அடங்கும் ஏற்கனவே சர்பராஸ்கான் நீக்கப்பட்டு தான் அவருக்கு பதிலாக கேஎல் ராகுலுக்கு இடம் கிடைத்தது. ஆனால் சர்பராஸ்கான் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.இதன் காரணமாக தான் சர்பிராஸ்க்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சர்பராஸ்கான் இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்ற குரல் வலுத்து உள்ளது. எப்படியும் ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு சுழற் பந்துவீச்சாளருக்கு பதில் ஒரு சுழற்பந்துவீச்சு தான் இந்திய அணி தேர்வு செய்யும். இதனால் ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் வைத்து விளையாட வேண்டிய சூழல் ரோகித் சர்மாவுக்கு ஏற்படும்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அணியில் சேர்க்க வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தற்போது சர்பராஸ்கான் இரட்டை சதம் அடித்திருப்பது இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது.

Story first published: Wednesday, October 2, 2024, 17:16 [IST]
Other articles published on Oct 2, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+