Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பராஸ் கான் எனது மகன் மாதிரி.. அவர் மேல ஒரு கண் வைங்கப்பா.. கிறிஸ் கெயில் புகழாரம்

பெங்களூர்: எனது மகனை போல இருக்கும் சர்பராஸ் கான் அருமையாக ஆடுகிறார் என்று மேற்கிந்திய தீவுகள் மற்றும் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளை சேர்ந்த கிறிஸ் கெயில் புகழ்ந்துள்ளார்.

பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் லீக் ஆட்டத்தில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 10 பந்துகளில் 35 ரன்கள் குவித்து அவுட் ஆகாமல் களத்தில் ஜொலித்தார் 'ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்' அணியின் சர்பராஸ் கான்.

பார்ப்பதற்கு அமுல் பேபி போல, கொழுக், மொழுக் தேக அமைப்போடு காணப்பட்டாலும், களத்தில் நிற்கும்போது, கொஞ்சமும் தாமதிக்காது, அங்குமிங்கும் நடமாடியபடி பேட்ஸ்மேன்களை குழப்பி ரன் குவிப்பதில் கில்லாடி சர்பராஸ் கான்.

பலே ஷாட்டுகள்

பலே ஷாட்டுகள்

சர்பராஸ் கானின் நேற்றைய ஆட்டம் ரசிகர்கள் பலரையும் புருவத்தை உயர்த்த செய்துள்ளது. அதிலும் பெடல் ஸ்வீப் எனப்படும் ஷாட்டுகளில் சர்பராஸ் கான் கை தேர்ந்தவாரக உள்ளார். லெக் பக்கம் மட்டுமின்றி, ஆப் சைடிலும், ரிவர்ஸ் ஸ்வீப் மூலமாக சிக்சர் அடிக்க முடியும் என்று சர்பராஸ் கான் காண்பித்தார்.

மகன் போல

மகன் போல

சர்பராஸ் கான் பேட்டிங் குறித்து சக ஆட்டக்காரரான அதிரடி வீரர் கிறிஸ் கெயில் கூறியதாவது: சர்பராஸ் கான் எனது மகனை போன்றவர். போட்டிகள் நடைபெறும்போது, எப்போதும், என் உடன் அமர்ந்திருப்பார். செல்போனில் மெசேஜ் மூலம் என்னை அவ்வப்போது, தொடர்பு கொள்வார்.

ஒரு கண் வையுங்கள்

ஒரு கண் வையுங்கள்

இன்று (நேற்று) சர்பராஸ் கான் ஆடிய விதம் மிகவும் அருமையாக இருந்தது. சர்பராஸ் கான் கண்டிப்பாக சிறந்த எதிர்காலத்தை கொண்டுள்ளார். சர்பராஸ் கான் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டியது அவசியம். இவ்வாறு கெயில் தெரிவித்தார்.

ஜூனியர் வீரர்

ஜூனியர் வீரர்

சமீபத்தில் நிறைவடைந்த 19 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக கோப்பைக்கான, இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்தவர் சர்பராஸ் கான். மும்பையை பூர்வீகமாக கொண்டவர். கடந்த ஐபிஎல் சீசனின்போதும் பெங்களூருக்காக ஆடிய சர்பராஸ் கான் ஒரு சில போட்டிகளில் விஸ்வரூபத்தை காட்டியிருந்தார். கிறிஸ் கெயிலுக்கு தற்போது 36 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, April 13, 2016, 15:14 [IST]
Other articles published on Apr 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+