"என்னை டீமில் எடுக்க மாட்டீங்களா?".. கம்பீருக்கு செக் வைத்த சர்பராஸ் கான்.. 17 கிலோ எடைகுறைப்பு
சென்னை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட இளம் வீரர் சர்பராஸ் கான், வெறும் 2 மாதங்களில் 17 கிலோ உடல் எடையைக் குறைத்து சிக்ஸ் பேக் உடற்கட்டுக்கு மாறி, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார். அவரது இந்த மிரட்டலான மாற்றம், தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் மற்றும் கோச் கௌதம் கம்பீருக்கு அவர் அனுப்பியுள்ள ஒரு மெசேஜ் என்றே பார்க்கப்படுகிறது.
புறக்கணிப்புக்கு பதிலடி!
உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன் மெஷினாக வலம் வந்த சர்பராஸ் கான், தனது உடல் எடையால் தொடர்ந்து விமர்சனங்களை சந்தித்து வந்தார். "பருமனாக இருக்கிறார், சர்வதேச கிரிக்கெட்டுக்கு ஃபிட் இல்லை" என பலரும் கூறிவந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையானது.

ஆனால், இந்த விமர்சனங்களையும், புறக்கணிப்பையும் கேட்டு துவண்டுவிடாத சர்பராஸ், அதற்கு பேட்டால் அல்ல, தனது உடலால் பதிலடி கொடுக்க முடிவு செய்தார். விளைவு, இன்று ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறி உள்ளார்.
பிரியாணி டூ ப்ரோக்கோலி.. மாறிய டயட்!
சர்பராஸ் கானின் இந்த இமாலய மாற்றத்திற்குப் பின்னால் கடுமையான உழைப்பு இருக்கிறது. தனக்கு மிகவும் பிடித்தமான சிக்கன், மட்டன் பிரியாணியை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டதாக அவரது தந்தை நௌஷாத் கான் தெரிவித்துள்ளார். ஜிம்மில் மணிக்கணக்கில் வொர்க் அவுட், கடுமையான டயட் என தன்னைத்தானே வருத்திக்கொண்டுள்ளார். தற்போது அவரது டயட்டில் ப்ரோக்கோலி, வேகவைத்த காய்கறிகள், கிரில்டு சிக்கன் மற்றும் மீன் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தேர்வுக்குழுவுக்கு வலுவான மெசேஜ்!
சமூக வலைதளத்தில் சர்பராஸ் கான் பகிர்ந்த புகைப்படம் காட்டுத்தீயாக பரவி வருகிறது. "இதுதான் உண்மையான அர்ப்பணிப்பு", "கம்பேக் கொடுக்க சரியான வழி" என ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர். கடந்த பிப்ரவரியில் இங்கிலாந்துக்கு எதிராக அறிமுகமான சர்பராஸ், 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்திய அணியில் தனது இடத்தை நிரந்தரம் செய்ய அவர் போராடி வரும் நிலையில், தனது ஃபிட்னஸ் மூலம் தேர்வாளர்களின் கவனத்தை மீண்டும் ஈர்த்துள்ளார். சர்பராஸின் இந்த மிரட்டல் லுக், "நான் மீண்டும் அணிக்கு திரும்ப தயார்" என்று அகர்கர் மற்றும் கம்பீருக்கு அவர் அடித்துள்ள சிக்னல் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications