Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10 கிலோ காலி.. குடும்பத்துடன் கோதாவில் இறங்கிய சர்பராஸ்.. இந்திய அணி இடத்தை நிரந்தரமாக்க திட்டம்

மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்குமா என ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் சர்பராஸ் கான், அதற்கு முன் முக்கியமான விஷயத்தைச் செய்திருக்கிறார். 6 வாரங்களில் 10 கிலோ அளவுக்கு எடையைக் குறைத்துத் தனது உடல் தகுதியை மேம்படுத்தி இருக்கிறார்.

இதைத் தனியாகச் செய்யவில்லை. அவரது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷத் கானும் இதில் இணைந்து இருக்கிறார். அவருடன் இளைய சகோதரர் மொயின் கானும் இந்த உடல் எடை குறைப்பு நிகழ்வில் ஒன்றாக இணைந்து செயல்பட்டு இருக்கிறார்.

Sarfaraz Khan India Test Cricket BCCI india vs england

இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் சர்பராஸ் கான் நிச்சயம் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. அவர் மாற்று வீரராக இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எனினும், பிளேயிங் லெவனில் தொடர்ந்து இடம் பெற வேண்டும் என்றால் உடல் தகுதியை மேம்படுத்துவது அவசியம் என்ற நிலையில்தான் அவர் இருந்தார்.

சர்பராஸ் கான் சற்றுப் பருமனாக இருந்தது அவரது வாய்ப்புகளை கேள்விக்குறியாக்கும் என்ற சந்தேகம் இருந்தது. அதைத் தவிர்ப்பதற்காக அவர் உடல் எடை குறைக்க முடிவு செய்து இருக்கிறார். அவர் காயம் காரணமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் வாய்ப்பு பெறவில்லை. அடுத்து ஐபிஎல் ஏலத்திலும் அவரை எந்த அணியும் வாங்கவில்லை. அதற்குக் காரணம் அவரது உடல் எடைதான் என்ற முடிவுக்கு வந்த அவர், இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

இது குறித்து அவரது தந்தை நௌஷத் கான் விவரித்தார். அவர் கூறியதாவது: "எங்கள் மொத்த குடும்பமும் உடல் எடை குறைப்பில் கவனம் செலுத்துகிறோம். சர்பராஸ் கான் ஆறு வாரத்தில் ஒன்பது கிலோ அளவுக்கு எடையைக் குறைத்தார். அது அத்தனை எளிது அல்ல. அவர் இன்னமும் உடல் எடையைக் குறைப்பதற்கான முயற்சியில் இருக்கிறார்.

சர்பராஸ் கானும் நானும் மும்பை கிரிக்கெட் அமைப்பின் உடற்பயிற்சி மையத்தில் தொடர்ந்து பயிற்சி செய்தோம். ஒரு வாரத்தின் ஆறு நாட்களில் தினமும் சுமார் ஒரு மணி நேரம் அங்கு பயிற்சி செய்தோம். அதன் பிறகு அங்கு இருக்கும் மைதானத்தில் நான் நடை பயிற்சி செய்தேன். சர்பராஸ் கான் ஒரு மணி நேரம் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். அதன் பிறகு 30 நிமிடம் நீச்சல் பயிற்சியைச் செய்தோம். எனது இளைய மகன் மொயின் கானும் நிறைய உடல் எடையைக் குறைத்து இருக்கிறார்.

சர்பராஸ் கானும் நானும் கோதுமை மாவு மற்றும் அரிசியை வீட்டில் முற்றிலுமாக நிறுத்தி விட்டோம். எங்கள் உணவுப் பழக்கம் மிகவும் கண்டிப்பானதாகவும் அதே சமயம் சுவாரசியமாகவும் மாற்றிக் கொண்டு இருக்கிறோம். நாங்கள் காய்கறியுடன் வேக வைத்த கோழி கறி, வேக வைத்த முட்டை உண்கிறோம். கிரீன் டீ மற்றும் பிளாக் காபி அருந்துகிறோம். மிகவும் குறைவான அளவில் ஆலிவ் ஆயில் மட்டுமே எங்கள் உணவில் சேர்த்துக் கொள்கிறோம்" என்றார்.

தற்போது சர்பராஸ் கான் இந்தியா ஏ அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதில் அவர் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறார். தற்போது உடல் எடை குறைந்து இருக்கும் நிலையில் அவரது ஆட்டம் இன்னும் அதிக தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Story first published: Monday, May 19, 2025, 12:56 [IST]
Other articles published on May 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+