Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கா இந்திய அணியில் இடமில்லை.. கர்ஜித்த சர்பராஸ் கான்.. சதம் விளாசி அஜித் அகர்கருக்கு பதிலடி!

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்ட வலி, உடல் எடை குறைப்புக்காகப் பட்ட கஷ்டம் என அத்தனையையும் அடித்து நொறுக்கும் வகையில், புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காக சர்பராஸ் கான் சதம் விளாசி மீண்டும் இந்திய அணி தேர்வாளர்களின் கதவைத் தட்டியுள்ளார். அவரது இந்த அதிரடி ஆட்டம், "என்னை அவ்வளவு எளிதில் குறைத்து மதிப்பிட வேண்டாம்" என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கருக்கு சொல்வது போல் இருந்தது.

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த சர்பராஸ் கான், சில போட்டிகளுக்குப் பிறகு இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான அணியில் இருந்து நீக்கப்பட்டார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. அவரது அனுபவமின்மையே நீக்கத்திற்குக் காரணம் என தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்திருந்தார்.

Sarfaraz Khan Roars Back with a Century in Buchi Babu Tournament Fires a Message to Selectors

இந்த நிராகரிப்புக்கு மத்தியில், சர்பராஸ் கான் தனது உடற்தகுதி மீது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், துவண்டுவிடாத சர்பராஸ், கடுமையான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் சுமார் 17 கிலோ வரை உடல் எடையைக் குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

அரிசி, சர்க்கரை போன்றவற்றைத் தவிர்த்து, கிரில்டு சிக்கன், மீன், அவித்த முட்டைகள் மற்றும் காய்கறிகளை உணவாக எடுத்துக்கொண்டு தனது உடலை கிரிக்கெட்டுக்கு ஏற்றவாறு மாற்றியுள்ளார். உடல் எடையை குறைத்தது மட்டுமின்றி, தனது பேட்டிங்கிலும் கவனம் சிதறவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், தற்போது நடைபெற்று வரும் புச்சி பாபு கிரிக்கெட் தொடரில் மும்பை அணிக்காகக் களமிறங்கினார்.

டி.என்.சி.ஏ லெவன் (தமிழ்நாடு) அணிக்கு எதிரான போட்டியின் முதல் நாளிலேயே, சர்பராஸ் கான் தனது வழக்கமான அதிரடி பாணியில் விளையாடி, வெறும் 92 பந்துகளில் சதத்தை எட்டினார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய அவர், 114 பந்துகளில் 138 ரன்கள் குவித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். அவர் 10 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களை விளாசி இருந்தார்.

இந்த அபாரமான சதம், மும்பை அணியை வலுவான நிலையில் நிறுத்தியுள்ளது. இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் சர்பராஸ் கான் மனதளவில் எவ்வளவு வலிமையுடன் இருக்கிறார் என்பதை இந்த ஆட்டம் காட்டுகிறது. தேர்வாளர்களின் முடிவு தனக்கு ஒரு தற்காலிகத் தடைதானே தவிர, நிரந்தர முற்றுப்புள்ளி அல்ல என்பதை தனது பேட் மூலம் உரக்கச் சொல்லியிருக்கிறார் சர்பராஸ் கான்.

தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் ரன்களைக் குவித்து, தனது உடற்தகுதியையும் நிரூபிப்பதன் மூலம், இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப சர்பராஸ் கான் தீவிரமாக முயற்சிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Tuesday, August 19, 2025, 7:33 [IST]
Other articles published on Aug 19, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+