Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சர்பராஸ் கான் இந்திய அணியில் சேர்க்கப்படாதது அவமானமான விசயம்.. பிசிசிஐயை சாடிய முன்னாள் வீரர்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியில் முன்னாள் தேர்வு குழு தலைவர் திலீப் வெங்கர்சார், சர்பராஸ் கானை தொடர்ந்து அணியில் சேர்க்காத அஜித் அகார்கரை கடுமையாக சாடி இருக்கின்றார். இந்திய உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வாய்ப்புக்காக பல ஆண்டுகள் காத்திருந்த சர்பராஸ் கான், 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கிடைத்து அறிமுகமானார்.

தொடர்ந்து சிறுசிறு வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் 2024 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணியில் சேர்க்கப்படவே இல்லை. இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவுக்காக வெறும் ஆறு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ள சர்பராஸ் கான், 371 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஒரு சதம், மூன்று அரை சதம் அடங்கும். எனினும் தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிரடியாக விளையாடி வரும் சர்பராஸ் கானுக்கு அணியில் ஏன் இடம் கிடைக்கவில்லை என்ற கேள்வியை தற்போது வெங்சர்கார் எழுப்பியுள்ளார்.

Sarfaraz khan

இது குறித்து பேசிய அவர், எனக்கு ஒரு விஷயம் மட்டும் புரியவே இல்லை. சர்பராஸ்கான் போன்ற திறமையான வீரர் எப்படி ஒரு பிரிவிலும் கூட இந்திய அணிக்காக சேர்க்கப்படுவது கிடையாது. அதுவும் தொடர்ந்து ஒரே மாதிரி ரன்களை குவித்து வருகின்றார். இந்தியாவுக்காக விளையாடும் போது கூட சர்பராஸ் கான் நன்றாக விளையாடினார்.

தர்மசாலாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் சர்பராஸ் கானும் தேவுதட் படிக்கல்லும் இணைந்து விளையாடிய ஆட்டத்தை நான் பார்த்தேன். இருவரும் அபாரமாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்து, இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்தார்கள். அந்த தொடருக்கு பிறகு நடந்த போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பின் நடைபெற்ற ஆஸ்திரேலிய தொடரிலும் அவருக்கு வாய்ப்பு தரப்படவில்லை. என்னை கேட்டால் இந்திய அணிக்காக மூன்று பிரிவிலும் விளையாடக்கூடிய திறமை வாய்ந்த வீரர், அவர் இவ்வளவு திறமை இருந்தும் அவரை அணியில் சேர்க்காமல் விடுவது உண்மையிலேயே அவமானமான விஷயம் என்று வெங்சர்கார் கூறியுள்ளார். கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்னிலும் எந்த அணியாலும் தேர்வு செய்யப்படாத சர்பராஸ் தற்போது அடிப்படை விலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, January 1, 2026, 12:08 [IST]
Other articles published on Jan 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+