Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சேவாக் பாதி.. சச்சின் பாதி.. !! சர்ஃபிராஸ் கான் செய்த சாதனை.. ரஞ்சி கிரிக்கெட்டில் அசத்தல் பேட்டிங்

மும்பை: ரஞ்சி கிரிக்கெட் தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணிக்காக விளையாடும் சர்பிராஸ் கான் சதம் விளாசியுள்ளார்.

உத்தரக்காண்ட் அணிக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது.

இதில் மும்பை அணிக்காக விளையாடி வரும் சர்ஃபிராஸ் கான், வழக்கம் போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சர்ஃபிராஸ் சதம்

சர்ஃபிராஸ் சதம்

பிரித்வி ஷா, ஜெய்ஷா மற்றும் அர்மான் ஜாபர் ஆகியோர் பொறுப்பாக விளையாடினாலும் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனையடுத்து களத்துக்கு வந்த சர்பிராஸ் கான், தனது வழக்கமான அதிரடியை காட்டினார். குறிப்பாக, சச்சின், சேவாக் ஆகியோரின் ஆட்டத்தை கலந்த மாதிரி ஷாட்களை ஆடி ரன்களை சேர்த்தார். இறுதியில் சர்ஃபிராஸ் 153 ரன்களை விளாசினார்.

அசத்தல் ரெக்காட்

அசத்தல் ரெக்காட்

இதில் 4 சிக்சர்களும், 14 பவுண்டரிகளும் அடங்கும். இதனால் மும்பை அணி 450 ரன்களுக்கு மேல் குவித்து விளையாடி வருகிறது. இதன் மூலம் 2020ஆம் ஆண்டுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் சர்ஃபிராஸ் கான் 6 சதங்கள் அடித்துள்ளார். இந்த 6 சதங்களுமே 150 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டவை. இதில் 2 இரட்டை சதமும், ஒரு முச்சதமும் அடங்கும்.

சாதனை பயணம்

சாதனை பயணம்

2020 ஆண்டுக்கு பிறகு ரஞ்சி கிரிக்கெட்டில் சர்ஃபிராஸ் அடித்த ரன்கள் பின்வருமாறு கர்நாடகாவிற்கு எதிராக 8, 71* தமிழ்நாட்டுக்கு எதிராக 36 ரன்கள், உபிக்கு எதிராக 301* ரன்கள், ஹிம்மாச்சலுக்கு எதிராக 226• ரன்கள், சௌராஸ்டிராக்கு எதிராக 78, 25 ரன்கள், மத்திய பிரதேசத்துக்கு எதிராக 177, 6 ரன்கள், சௌராஷ்டிராவுக்கு எதிராக 275 ரன்கள், கோவாக்கு எதிராக 63,48 ரன்கள் ஓடிசாக்கு எதிராக 165 ரன்கள், உத்தரக்கண்ட்க்கு எதிராக 153 ரன்கள் அடித்துள்ளார்.

எப்போது வாய்ப்பு?

எப்போது வாய்ப்பு?

தொடர்ந்து ரஞ்சி கிரிக்கெட்டில் அதிரடி காட்டும் சர்பிராஸ் கான், இதுவரை இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திய டெஸ்ட் அணியில் சர்பிராஸ் கானுக்கு வாய்ப்பளித்தால் அவர் நிச்சயம், பெரிய சாதனை படைப்பார். உள்ளூர் கிரிக்கெட்டில் இத்தனை சாதனை படைத்தும், அவருக்கு இனியாவது தேர்வுக்குழுவினர் வாய்ப்பு வாங்க வேண்டும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Story first published: Tuesday, June 7, 2022, 13:33 [IST]
Other articles published on Jun 7, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+