Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நெருங்குது ஐபிஎல் போட்டிகள்... பரபரப்பில் இளம்வீரர்கள்... ஷமி பண்ணையில் சர்பராஸ் பயிற்சி

மும்பை : ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதிவரை யூஏஇயில் நடைபெறவுள்ளது.

கொரோனா காரணமாக கடந்த 4 மாதங்களாக பயிற்சிகள், போட்டிகள் எதுவும் இன்றி வீட்டில் முடங்கியுள்ள வீரர்கள் தற்போது பயிற்சிபெறும் கட்டாயத்தில் உள்ளனர்.

இந்நிலையில், ஐபிஎல்லை முன்னிட்டு முன்னணி பந்துவீச்சாளர் முகமது ஷமியின் பண்ணையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் சர்பராஸ் கான் பயிற்சி மேற்கொண்டார்.

பயிற்சிகளை துவங்கிய வீரர்கள்

பயிற்சிகளை துவங்கிய வீரர்கள்

ஐபிஎல் 2020 போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ள நிலையில், கடந்த 4 மாதங்களாக வீட்டில் முடங்கியுள்ள முன்னணி வீரர்கள், இளம் வீரர்கள் என பாரபட்சமின்றி பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரத்தில் முன்னணி வீரர்கள் முகமது ஷமி, சுரேஷ் ரெய்னா மற்றும் பியூஷ் சாவ்லா ஆகியோர் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

சர்பராஸ் கான் பயிற்சி

சர்பராஸ் கான் பயிற்சி

இந்நிலையில் ஐபிஎல்லை முன்னிட்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னணி பௌலர் முகமது ஷமியின் பண்ணையில் அந்த அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் பயிற்சி மேற்கொண்டார். இந்த பண்ணையில் தான் ஊரடங்கு சமயத்தில் முகமது ஷமி முழுமையான பயிற்சிகளை மேற்கொண்டார்.

சர்பராஸ் தனியாக பயிற்சி

சர்பராஸ் தனியாக பயிற்சி

உத்தரபிரதேசத்தின் அம்ரோஹாவில் உள்ள இந்த பண்ணை வீட்டில் சர்பராஸ் பயிற்சி மேற்கொண்ட நிலையில், அவருடன் முகமது ஷமி பயிற்சியில் ஈடுபடவில்லை என்று சர்பராசின் தந்தை தெரிவித்துள்ளார். காலை வேளையில் முழுமையான பயிற்சியில் ஈடுபட்ட ஷமி, சர்பராசுடன் பயிற்சியில் ஈடுபடவில்லை.

செல்பி வெளியிட்ட ஷமி

செல்பி வெளியிட்ட ஷமி

இந்நிலையில் தன்னுடைய பண்ணையில் பயிற்சியில் ஈடுபட்ட சர்பராசுடனான செல்பி எடுத்து முகமது ஷமி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தன்னுடைய பண்ணையின் பயிற்சியில் புதுவரவு என்றும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் வரும் செப்டம்பர் 19ம் தேதி துவங்கி நவம்பர் 8ம் தேதி வரை யூஏஇயில் தொடர்ந்து நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 28, 2020, 15:53 [IST]
Other articles published on Jul 28, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+