For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தப்புன்னா புகார் பண்ணனும்.. அது என்ன “ராங்”கா சைகை காட்டுறது.. எகிறும் பாக். கேப்டன்

துபாய் : பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

துபாயில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், ஹபீஸின் பந்துவீச்சு தவறாக இருப்பதாக சைகை காட்டினார். அது பாகிஸ்தான் அணியை கோபத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.

தண்டனை பெற்ற ஹபீஸ்

தண்டனை பெற்ற ஹபீஸ்

பாகிஸ்தான் அணியின் முகமது ஹபீஸ் ஆல்-ரவுண்டராக இருக்கிறார். அவரது சுழற்பந்து வீசும் முறை தவறாக இருப்பதாக முன்பு ஐசிசி-யால் பல முறை தண்டனை பெற்று இருக்கிறார். கிரிக்கெட்டில் ஒரு வீரர் பந்துவீசும் போது பந்து அவரது தோள்பட்டைக்கு மேல் இருந்து வெளியேற வேண்டும். ஹபீஸ் பந்து வீசும் போது பல முறை தோள்பட்டைக்கு கீழே இருந்து பந்து வெளியேறுமாறு வீசி இருக்கிறார். அதற்கு தண்டனையும் பெற்று விட்டார்.

சைகை செய்த ராஸ் டெய்லர்

சைகை செய்த ராஸ் டெய்லர்

இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஹபீஸ் வீசிய பந்து தவறாக வீசப்பட்டதாக, நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் கருதியுள்ளார். அதனால், இரண்டு, மூன்று முறை ஹபீஸ் பந்து வீசி முடித்த உடன் ராஸ் டெய்லர் தோள்களுக்கு கீழே இருந்து பந்து வீசியதைப் போல சைகை செய்தார்.

புகார் அளித்த சர்ப்ராஸ்

புகார் அளித்த சர்ப்ராஸ்

இதனால், பாகிஸ்தான் கேப்டன் சர்ப்ராஸ் அஹ்மத் கோபமடைந்து ராஸ் டெய்லர் மற்றும் அம்பயர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போட்டி முடிந்த நிலையில், ராஸ் டெய்லர் மீது சர்ப்ராஸ் புகார் அளித்துள்ளார்.

அம்பயரிடம் சென்று பேசலாம்

அம்பயரிடம் சென்று பேசலாம்

இது பற்றி பேசிய சர்ப்ராஸ், "ராஸ் டெய்லரின் செய்கை தவறானது. அது அவரது வேலையல்ல. அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்துவது நல்லது. அவருக்கு ஏதாவது பிரச்சனையாக இருந்தால் தொலைக்காட்சியில் தெரிவது போல சைகை செய்யாமல், அம்பயரிடம் சென்று பேசலாம். ஹபீஸின் பந்துவீச்சில் எந்த தவறும் இல்லை. எந்த காரணமும் இல்லாமல் அந்த பேட்ஸ்மேன் பிரச்சனை செய்ய நினைக்கிறார்" என கூறினார்.

Story first published: Friday, November 9, 2018, 11:38 [IST]
Other articles published on Nov 9, 2018
English summary
Pakistan Captain Sarfraz Ahmed is not happy with Ross Taylor for his remarks over Hafeez bowling
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X