பாகிஸ்தான் டி20 அணி கேப்டனாக சர்பிராஸ் அகமது நியமனம்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் டி20 அணி கேப்டனாக இருந்த அப்ரிடி ராஜினாமா செய்த நிலையில் புதிய கேப்டனான சர்பிராஸ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இது கடும் விமர்சனங்களை உருவாக்கியது. இதனால் கேப்டன் பதவியில் இருந்து சாகித் அப்ரிடி ராஜினாமா செய்தார்.

அத்துடன் தமது ஆலோசனைகளை கேட்க மறுத்ததாகக் கூறி பயிற்சியாளர் வாக்கார் யூனிசும் பதவி விலகினார். இந்நிலையில் அப்ரிடிக்குப் பதிலாக டி20 அணியின் கேப்டனாக சர்பிராஸ் அகமதுவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.
கடந்த ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 அணிகளுக்கு துணை கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், இப்போது சர்பிராஸ்க்கு டி20 அணிக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Story first published: Wednesday, April 6, 2016, 8:36 [IST]
Other articles published on Apr 6, 2016


Click it and Unblock the Notifications