டோணி ஷீக் கபாப், தவான் தம் பிரியாணி, ராயுடு சாப்ஸ் சாப்பிடலையா?
கொல்கத்தா: உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியையொட்டி வீரர்களின் பெயர்களில் பல வகையான உணவு வகைகள் இன்று விற்பனை செய்யப்படுகிறது.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா இதுவரை தான் ஆடிய 7 போட்டிகளிலும் வெற்றி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கேப்டன் டோணியின் வியூகங்களை கணிக்க முடியாமல் எதிரணியினர் திணறி வருகிறார்கள்.
இந்நிலையில் இந்தியா அரையிறுதிப் போட்டியில் விளைாடும் இன்று மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வீரர்களின் பெயர்களில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது.

டோணி
கேப்டன் டோணி பெயரில் டோணி சோயா மலாய் ஷீக் கபாப் இன்று விற்பனை செய்யப்படுகிறது. கொல்கத்தாவைச் சேர்ந்த அந்த பிரபல உணவகத்திற்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. அனைத்து கிளைகளிலும் வீரர்களின் பெயர்களில் தயாரிக்கப்படும் உணவுகள் கிடைக்கும்.

கோஹ்லி
பன்னீர் கோஹ்லி லாபடார், ராயுடு சாப்ஸ் ஹன்டி, தம் கி ஷிகர் தவான் பிரியாணி, அம்பாட்டி ஆலூ டிக்கா ஆகிய உணவு வகைகள் இன்று விற்பனை செய்யப்படுகிறது.

வாட்சன்
வாட்சன் சாக்கோ ம்யூஸ், பெய்லி குலாப் ஜாமூன் ஆகியவை ஆஸ்திரேலிய வீரர்களை கௌரவிக்கும் வகையில் தயாரிக்கப்படுகிறது.

இந்தியா
இந்திய அணி தான் இன்று வெற்றி பெறும் என்று நமக்கு தெரியும். ஆட்டத்தின் முடிவுக்கேற்ப உணவு வகைகளை விற்பனை செய்வோம். ஆனால் நம்முடைய பிரார்த்தனையால் இந்தியா வெற்றி பெறும். இறுதிப் போட்டிக்கு பிறகு பெரிய கொண்டாட்டம் உள்ளது என்று உணவகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications